முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நகர சுகாதாரத்துறை சார்பில் சுகாதார ஆய்வாளர்கள் மேட்டு தெரு மார்க்கெட், மங்காபுரம் மார்க்கெட் ஆகிய பகுதிகளுக்கு சென்று முக கவசம் அணியாமல் யாரேனும் வருகிறார்களா? என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த 12 பேருக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதித்தனர்.

Related posts

Leave a Comment