செய்திகள் சில வரிகளில் …. குழந்தை உழைப்பு எதிர்ப்பு தினம்

காரியாபட்டி, ஜூன் 13-காரியாபட்டியில் மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கம், காரியாபட்டி சைல்டு லைன் துணை மையம் சார்பாக குழந்தைகள் உழைப்பு எதிர்ப்பு தினம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமையில் நடந்தது. ஒன்றிய சமூக நல அலுவலர் மங்கம்மாள் துண்டு பிரசுரங்கள் வழங்கினார். களப்பணியாளர்கள் பொருட்செல்வி, ஞானம், பாலன், முத்துமாரி, கிருஷ்ணவேணி கலந்து கொண்டனர்.

ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

சாத்துார்: கோயில்களை திறக்க வலியுறுத்தி சாத்துார் வெங்கடாஜலபதி கோயில்,

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் முன்பு ஒற்றைக்காலில் நின்று ஹிந்து முன்னணியினர்

ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில அமைப்பாளர் பொன்னையாஜி தலைமை வகித்தார். நகர செயலாளர் கார்த்திக், நகர, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வனராஜ் முன்னிலை

வகித்தார்.

வலைதள கருத்தரங்கம்

சிவகாசி: சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லுாரி இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல் துறைகள் இணைந்து கொரோனா நெருக்கடி நிலையில் புதுமையான வியாபார உத்திகள் என்ற தலைப்பில் 3 நாட்கள் வலைதள கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். முதுகலை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் சரஸ்வதி வரவேற்றார். துறை தலைவர் அமுதாராணி சிறப்பு விருந்தினரை

அறிமுகம் செய்தார். பெங்களூர் நிகர்நிலை பல்கலை உதவி பேராசிரியர் சுரேஷ் பேசினார்.

சுற்றுச்சாலை கருத்து கேட்பு

சிவகாசி: போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோரிக்கை ஏற்று சிவகாசி வெளிப்புறத்தில் சுற்றுச்சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக திருத்தங்கல், கீழ திருத்தங்கல், அனுப்பன்குளம், வெற்றிலையூரணி , ஈஞ்சார்

உள்ளிட்ட 10 கிராமங்கள் வழியாக ரோடு அமைய உள்ளது. கிராம மக்களிடம் நில எடுப்பு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

Related posts

Leave a Comment