விருதுநகர் மாவட்டத்தில் ராணுவவீரர் உள்பட 4 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் ராணுவவீரர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 11,774 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டத்தில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 441 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதில் 127 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.இந்த நிலையில் நேற்று விருதுநகர்மாவட்டத்தில் வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்த 3 பேர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள விழுப்பனூர் கிராமத்தை சேர்ந்த 39 வயது ராணுவவீரருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. இவர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்துள்ளார்.

மேலும் விருதுநகர் அருகே உள்ள குரண்டி கிராமத்தை சேர்ந்த 36 வயது நபர், மும்பையில் இருந்து திரும்பிய நிலையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. வத்திராயிருப்பை சேர்ந்த 53 வயது நபருக்கும், விருதுநகர் ஆர்.ஆர்.நகரை சேர்ந்த 50 வயதானவருக்கும் கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து திரும்பியவர்கள் ஆவர்.

இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 201- ஆக உயர்ந்துள்ளது. இந்த மாவட்டத்தில் வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில மாவட்ட நிர்வாகம் இதற்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

Related posts

Leave a Comment