500 ஆண்டு முந்தைய ஆதிசிவன் கோயில் :கருநாகம் வந்ததால் கணக்கனேந்தலில் பூஜை

காரியாபட்டி:காரியாபட்டி கணக்கனேந்தலில் ஆதிசிவன் கோயில் இருந்தது தற்போதைய தலைமையினருக்கு தெரியாது. இங்கு கருநாகம் நடமாட்டம் இருந்துள்ள நிலையில்

இதனால் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்றாலும் இதன் நடமாட்டத்தை கண்டு கிராமத்தினர் அஞ்சினர்.

சிலர் கண்ணில் தென்பட்டு அங்குள்ள புற்றுக்குள் சென்று மறைந்து விடும். இக்கிராமத்தினர் சித்தர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டதில் அப்பகுதியில் 500 ஆண்டுகளுக்கு முன் பயன்

படுத்தப்பட்ட மயானத்தில் சிவன், முனீஸ்வரராக உலா வருவதாகவும் அங்கு நாகர் சிலை பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும். பவுர்ணமி அன்று புற்றுக்கு பூஜை செய்தால் ஊருக்கும் மக்களுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என தெரிவித்தனர்.

இதையடுத்து ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கி

வருகின்றனர். இங்கு வந்து வழிபட்ட பலருக்கு தீராத நோய் தீர்ந்து குழந்தை பாக்கியம் மன அமைதி கிடைத்து நாகதோஷம் நீங்கியதாக தெரிவித்தனர். பவுர்ணமி அன்று சுற்று

வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பூஜை செய்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment