நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

ராஜபாளையம்:ராஜபாளையம் தாலுகாவில் சேத்துார் ,தேவதானம் பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நெல் கொள்முதல் நடந்து வருகிறது.

கடந்த பிப்.,முதல் ராஜபாளையத்தில் கொள்முதல் நிலையம் துவங்கியது. தற்போது இங்கு நேற்று முதல் கொள்முதல் தொடங்கி குவிண்டாலுக்கு மோட்டா ரகம் ரூ. 1,865, சன்ன ரகம் ரூ. 1,905 என கொள்முதல் செய்தனர். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா, நகர தலைவர் முருகேசன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment