தலைவலியை போக்கும் சவுக்கு விதை: மரம் வளர்ப்பில் சாதிக்கும் இளைஞர்

விருதுநகர்:ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட மரப்பயிர் சவுக்கு. கடற்கரை பகுதிகளில் காணப்படும் இவைகள் மாவட்டத்தில் திருத்தங்கல், சிவகாசி பகுதிகளில் இயற்கை வேலியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இம்மரங்களின் இலை ஊசியிலை வகையாகும். அரிதாகவே கிளை விடும் இயல்புடைய இம்மரம் அதிகபட்சமாக 40 மீட்டர் உயரம் வளரும். 50 ஆண்டுகள் வரை வாழும் இது போதிய சூழல் இல்லாத இடங்களில் 25 ஆண்டுகள் வரையே வளரும். கடற்கரை மண் பகுதி களில் நன்கு வளரும். இதுபோன்று வடிகால் அமைப்புள்ள ஈரப்பதமான மண்களிலும் நன்கு வளரும்.

இதை விருதுநகர் அருகே பாப்பாகுடியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஆபிரகாம் வளர்த்து வருகிறார். இரண்டரை ஏக்கர் நிலத்தில் அரை ஏக்கரை ஈரப்பதமாக வைத்து வாட்டர் ஆப்பிள் தோட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் இயற்கை வேலியாக இதை வளர்க்கிறார்.இம்மரம் வல வகையில் மக்களுக்கு பயன் அளிக்கிறது. காகித கூழ், கட்டுமான வேலைக்கு சாரம் அமைக்க கம்பாக பயன்படுகிறது.

இதன் இலைகள் வயிற்று போக்கை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது தனி சிறப்பு. இதன் விதையில் இருந்து உருவாக்கப்படும் களிம்பு தலைவலியை போக்குகிறது. காய வைத்த இலைகள் முடி உதிர்வையும் கட்டுப்படுத்துகிறது.

Related posts

Leave a Comment