விருதுநகர் மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு : கொரோனாவுக்கு வாலிபர் பலி

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு வாலிபர் பலியானார். இது அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு ஆகும்.
சாத்தூர் அருகே புல்லக்கவுண்டன்பட்டியை சேர்ந்த 32 வயது வாலிபரும், அவரது 28 வயது மனைவியும் கடந்த 7-ந் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினர். இவர்கள் ஊருக்குள் நுழைவதற்கு முன்பே அருகே உள்ள கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். மருத்துவ பரிசோதனையில் இவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து இவர்கள் 2 பேரும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

Related posts

Leave a Comment