கோலி குறும்பானவர்… தோனி மிஸ்டர் கூல்… ரசிகர்களுக்கு பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித்

சிட்னி : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டில் முடங்கியுள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது இந்திய கேப்டன் விராட் கோலியை ஒரே வார்த்தையில் வர்ணிக்க கேட்ட ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த அவர் கோலி குறும்பானவர் என்று தெரிவித்தார். இதேபோல முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி குறித்த கேள்விக்கு, அவர் ஒரு ஜாம்பவான் என்றும், மிஸ்டர் கூல் என்றும் ஸ்மித் பதிலளித்தார்.

ஆன்லைன் கலந்துரையாடல்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச அளவில் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களை தொடர்ந்து பரபரப்பாக வைத்துக் கொள்ள இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள், பல்வேறு ஆன்லைன் கலந்துரையாடல்கள், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்ற பல்வேறு செயல்களை அரங்கேற்றி வருகின்றன.

ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொரோனா வைரஸ் காரணமாக தனது வீட்டில் முடங்கியுள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் இதேபோல பல்வேறு ஆன்லைன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அதில் பல்வேறு கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டாலும், விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் குறித்த கேள்விகளே பிரதானமாக இருந்தது.

ஒருவருக்கொருவர் மரியாதை இந்த கேள்வி -பதில் நிகழ்ச்சியில் விராட் கோலி குறித்து ஒரே வார்த்தையில் கருத்தை பகிர ரசிகர் ஒருவர் கேட்டுக் கொண்டார். அதற்கு விராட் குறும்பானவர் என்று ஸ்மித் பதிலளித்துள்ளார். விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் கால்பந்தாட்டத்தின் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் ஒப்பிட்டு பேசப்படுகின்றனர். மைதானத்தில் இவர்களுக்குள் போட்டி அதிகமாக இருந்தாலும், வெளியில் இவர்கள் ஒருவருவருக்கொருவர் சிறந்த மரியாதையை அளித்து வருகின்றனர்.

மிகசிறந்த வீரர் கே.எல்.ராகுல் தொடர்ந்து தோனி குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித், கிரிக்கெட்டில் அவர் ஒரு ஜாம்பவான் என்றும், மிஸ்டர்கூல் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல, இந்திய வீரர்களில் தன்னை கவர்ந்தவர் கே.எல். ராகுல் என்றும் மிகச்சிறந்த விளையாட்டு வீரர் அவர் என்றும் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

மொக்கை வாங்கிய லாபுசாக்னே இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் சக வீரர் லார்னஸ் லாபுசாக்னேவும் கேள்வி கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு பதிலுடன் கிடைத்தது மொக்கையும்தான். பேட்டிங்கில் அவருடன் இணைந்து விளையாட யாரை விரும்புவீர்கள் என்று லாபுசாக்னே கேள்வியெழுப்ப, கண்டிப்பாக உன்னுடன் இல்லை என்றும் நீ ரொம்ப பேசுவாய் என்றும் ஸ்மித் நகைச்சுவையுடன் பதிலளித்தார்.

Related posts

Leave a Comment