இதுவா அரசியல் செய்யும் நேரம்.. கும்புட்டு கேக்கறேன், மாஸ்க் போடுங்க எல்லாரும்.. விஜயபாஸ்கர் உருக்கம்

சென்னை: “இது அரசியல் செய்ய நேரமில்லை” என்று முக ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “உங்களை கும்பிட்டு கேட்டுக்கறேன்.. தயவு செய்து எல்லாரும் மாஸ்க் போடுங்க” என்று உருக்கமான வேண்டுகோளை பொதுமக்களிடம் விடுத்துள்ளார். விஜயபாஸ்கர் கொரோனா விழிப்புணர்வு குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “அரசு எந்த தகவலையும் மறைக்கவில்லை… எல்லா தகவலையும் அரசு வெளிப்படையாக அறிவித்து வருகிறது.. பாதிக்கப்பட்டவர்களை தேடி பிடிக்கிறோம். 80 லட்சம் பேர் மக்கள் வசிக்கும் சென்னையில் 1,85,000 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.. சரியான நேரத்தில் டெஸ்ட் செய்த காரணத்தால் தான் இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது… அதேபோல, அரசு மருத்துவமனைகளிலும் எல்லா வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் 17 ஆயிரம் படுக்கைகள், சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 5 ஆயிரம் படுக்கைகள், தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில்…

Read More

அஜித்தின் ஃபேவரைட் இயக்குனர் சரணுக்கு இன்று பிறந்த நாள்.. வி.ஐ.பிக்கள் வாழ்த்து !

சென்னை : அஜித்தின் பல வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அஜித்தின் ஃபேவரைட் இயக்குனரான சரண் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.. காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற வெற்றி படங்களை அஜித்திற்கு கொடுத்த இயக்குனர் சரணுக்கு அஜித் ரசிகர்கள் சார்பாகவும் பல வாழ்த்துக்கள் குவிந்து வருக்கிறது. மேலும் இவர் தனது 54 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருவதையொட்டி இவருக்கு நண்பர்களும் ரசிகர்களும் மற்றும் திரைப் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்களைச் சொல்லி வருகின்றனர். புதுப்புது அர்த்தங்கள் கே பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக புதுப்புது அர்த்தங்கள் படத்தின் மூலமாக இணைந்தார். பிரபல பத்திரிகை நிறுவனத்தில் கார்டுனிஸ்ட்டாகவும் அதேசமயம் இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் சில நாட்களுக்கு பின் அந்த பத்திரிகையில் இருந்து வெளிவந்து முழுநேர உதவி இயக்குனராக…

Read More

வீரமரணம் எய்திய ராணுவ வீரர் பழனி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் -முதல்வர்

சீன ராணுவம் தாக்கியதில் தமிழக வீரர் பழனி உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது. வீரமரணம் எய்திய ராணுவ வீரர் பழனி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் -முதல்வர் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கிறேன். நாட்டிற்காக இன்னுயிர் ஈந்த 3 ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு வீர வணக்கம் -மு.க.ஸ்டாலின். சீனாவின் கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி. தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு இரங்கல் – டிடிவி தினகரன்.

Read More

சீன எல்லையில் பதற்றம்.. இந்திய ராணுவ தளபதி பதன்கோட் பயணம் ரத்து

டெல்லி: இந்தியா-சீனா எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில், நேற்று திங்கள்கிழமை இரவு சீன ராணுவம் நடத்திய அத்துமீறிய கல்வீச்சு தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்திய ராணுவம், இன்று வெளியிட்ட அறிக்கையில், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. சீன தரப்பில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. பரபரப்பான சூழலில் முப்படை தளபதிகளுடன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதுகுறித்த உடனுக்குடன் தகவலுக்கு இணைந்திருங்கள்:

Read More

சூப்பர் ஊரடங்கால் இறப்பு குறைந்தது.. உலகிற்கே இது பாடம்- முதல்வர்களுடனான மீட்டிங்கில் மோடி பெருமிதம்

டெல்லி: ஊரடங்கு உத்தரவை சிறப்பாக செயல்படுத்தி, உலகத்திலேயே குறைவான இறப்பு விகிதத்தை பராமரிக்கிறோம். பிறருக்கு நமது அனுபவங்கள் பாடமாக மாறப்போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கொரோனா பாதிப்பு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பஞ்சாப், அசாம், கேரளா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீப் உள்ளிட்டவற்றின் முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை துவங்கியது. தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் நாளை மோடி ஆலோசிப்பார். மோடி தனது துவக்க உரையில் கூறியதை பாருங்கள்: மக்கள் தொகை கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த இந்தியர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியர்களில்…

Read More

Edappadi K. Palaniswami Chief Minister of Tamil Nadu

*அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணம் நிதியுதவி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மண்ணின் மைந்தர், மக்கள் தலைவர், டாக்டர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உத்தரவு* *மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்துள்ள 13.35 லட்சம் பேருக்கு வழங்க உத்தரவு* *ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை*

Read More

10, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க!

வட மத்திய இரயில்வேத் துறையில் காலியாக உள்ள எலக்ட்ரீஷியன் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-வது தேர்ச்சி, ஐடிஐ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதிகள் உடையவர்கள் ஆவர். எலக்ட்ரீஷியன் பணிக்கு மொத்தம் 12 பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : வட மத்திய இரயில்வே மேலாண்மை : மத்திய அரசு மொத்த காலிப் பணியிடம் : 12 கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும்,…

Read More