கிறிஸ் கெய்ல், டீ வில்லியர்ச விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன்… கவுதம் கம்பீர் பாராட்டு

டெல்லி : இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டக்காரர் என்றும் டி20 வடிவத்தில் அவர் சிறப்பாக திகழ அவரது உடல் வலிமையே முக்கிய காரணம் என்றும் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். அடித்து ஆடுவதில் குறிப்பாக ஸ்பின் பௌலிங்கை எதிர் கொள்வதில் கிறிஸ் கெய்ல், ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோரை காட்டிலும் விராட் கோலி சிறப்பானவர் என்றும் கவுதம் கம்பீர் குறிப்பிட்டுள்ளார். இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, மிகப்பெரிய ஷாட்களை அடித்து ஆடுவதில் வல்லவர் என்றாலும், நிலையான ஆட்டத்தில் விராட் கோலி அவரை விட சிறப்பானவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து வடிவங்களிலும் சிறப்பு கேப்டன் விராட் கோலி தனது சிறப்பான ஆட்டம் மற்றும் கேப்டன்ஷிப் மூலம் சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். சர்வதேச அளவில் தற்போது வலிமையான வீரர் அவர் என பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளங்கிவரும் கோலி, டி20 வடிவத்திலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

கவுதம் கம்பீர் பாராட்டு இதனிடையே, விராட் கோலி மிகவும் ஸ்மார்ட்டான ஆட்டக்காரர் என்று முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். டி20 வடிவத்தில் அவர் சிறப்பாக திகழ அவரது வலிமையும் அடித்து ஆடும் திறமையுமே காரணம் என்றும் கம்பீர் கூறியுள்ளார். டி20 வடிவத்தில் 82 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 2,794 ரன்களை அடித்துள்ளார். அவரது சராசரி 50.8ஆக உள்ளது.

கோலி வெற்றிக்கு காரணம் விராட் கோலியின் மிகப்பெரிய வலிமை அவரது பிட்னஸ்தான் என்று கூறியுள்ள கம்பீர், அதை தான் ஆடும் ஆட்டங்களில் முறையாக அவர் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதுவே அவரது வெற்றிக்கு காரணம் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆட்டத்தின் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடும் திறமை உலக அளவில் தற்போது ஒருசில வீரர்களுக்கே உள்ளது என்றும் அதில் கோலி சிறப்பாக செயல்படுவதன்மூலம் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுவதாகவும் கூறியுள்ளார்.

கெய்ல், வில்லியர்சைவிட சிறப்பு தன்னுடைய அடித்து ஆடும் திறமையால்தான் சக வீரர் ரோகித் சர்மாவை விட சிறப்பாக கோலி உள்ளதாகவும் கம்பீர் கூறியுள்ளார். ரோகித் சர்மா பெரிய ஷாட்களை அடித்து ஆடினாலும், நிலையான ஆட்டத்தின் மூலம் விராட் கோலி ரோகித்தைவிட முன்னணியில் உள்ளதாகவும் கம்பீர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கிறிஸ் கெய்ல், ஏபி டீ வில்லியர்சை காட்டிலும் அடித்து ஆடும் திறனில் கோலி சிறப்பானவர் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment