சென்னையில் இருந்து போலி இ-பாஸ் மூலமாக வந்த 3 பேர் மீது வழக்கு

சென்னையில் இருந்து போலி இ-பாஸ் மூலமாக காரில் வந்த 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அழகாபுரி சோதனைச்சாவடியில் 24 மணி நேரமும் போலீசாரும், வருவாய்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சென்னையில் இருந்து மதுரை வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல ஒரு கார் வந்தது

அந்த காரில் 3 பேர் இருந்தனர். அந்த காரை, அதிகாரிகள் மறித்து அவர்களிடம் இ-பாஸ் உள்ளதா என சோதனை செய்தனர். அப்போது அவர்கள் போலி இ-பாசை பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார், காரில் வந்த 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related posts

Leave a Comment