சீனா திட்டமிட்டே தாக்கியது: சீன மந்திரியிடம் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

லடாக்கின் கல்வான் பகுதியில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதாக, சீன வெளியுறவு மந்திரி வாங் யி-யிடம், தொலைபேசியில் பேசியபோது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

லடாக்கின் கல்வான் பகுதியில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் இறந்ததாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இருநாட்டை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொலைபேசியில் பேசிய, வாங் யி ‘‘எல்லையில் ஏற்பட்ட மோதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபமூட்டும் வகையில், எந்த நடவடிக்கை எடுக்கக்கூடாது என ராணுவத்தை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற மோதல் மீண்டும் நடைபெறாததை இந்தியா உறுதி செய்ய வேண்டும். தற்போதைய சூழலை இந்தியா தவறாக கணிக்கக்கூடாது. அந்த பகுதியின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்ற சீனாவின் உறுதியை குறைத்து மதிப்பிடக்கூடாது’’ என தெரிவித்தார்.
ஜெய்சங்கர் பேசியது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘கல்வானில் நடந்தது, சீனாவால் முன்னரே திட்டமிடப்பட்டது. இதற்கான பின்விளைவுகளுக்கு அந்நாடே பொறுப்பேற்க வேண்டும். இந்த நிகழ்வுகள், இரு நாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் சீனா தனது நடவடிக்கையை ஆய்வு செய்து ஆய்வு செய்வதுடன், சரியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

Related posts

Leave a Comment