11-வது நாளாக விலை உயர்வு- சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.86

பெட்ரோல், டீசல் விலை 11வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாயை நெருங்கி உள்ளது.

சென்னை:

ஊரடங்கு உத்தரவு காரணமாக வாகன போக்குவரத்து முடங்கியது. அப்போது பெட்ரோல், டீசல் விற்பனை மிகவும் குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை நிர்ணயிக்கவில்லை. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வாகனங்கள் அதிக அளவில் இயங்க தொடங்கிய நிலையில், கடந்த 7ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அன்றைய தினம் பெட்ரோல் 53 காசுகளும், டீசல் 52 காசுகளும் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து விலை உயர்த்தப்படுகிறது. அவ்வகையில் இன்று 11வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 49 காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 86 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை லிட்டருக்கு 52 காசுகள் உயர்ந்து, 73 ரூபாய் 69 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 11 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் 32 காசுகளும், டீசல் 5 ரூபாய் 47 காசுகளும் உயர்ந்துள்ளன.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 55 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் 77 ரூபாய் 28 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 69 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் 75 ரூபாய் 79 காசுகளாகவும் உள்ளது.

Related posts

Leave a Comment