கொரோனா காலத்தில் மக்களுக்கு அடிமேல் அடி விண்ணை தொடும் பெட்ரோல், டீசல் விலை

கொலைகார கொரோனா மனித தலைகளை தேடித்தேடி வேட்டையாடும் நிலையில் அடிமேல் அடியாய் பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவு விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து, நம் தலைக்குமேல் கத்தியாக தொங்கி உயிரை ஊசலாட விட்டுக்கொண்டிருக்கிறது. இந்த விலை உயர்வால் படாதபாடுபடும் விருதுநகர் மாவட்ட மக்கள், கார், ஆட்டோ
டிரைவர்கள், நிர்வாகிகள் பதிவு செய்த மனக்குமுறல்கள்…


மேலும் மேலும் சுமையேகொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கிறோம்.ரோடு வரி,இன்சூரன்ஸ்,

எப்.சி., என பல்வேறு சுமைகளுக்கு நடுவில்பெட்ரோல் விலை உயர்வு மேலும் சுமையாக

உள்ளது. பெட்ரோல் விலை உயர்வை கூறி திடீர் என வாடகையைஉயர்த்த முடியாது.

உதிரிபாகங்களின் விலையும்பெட்ரோல் விலை உயர்வால்உயரும் நிலை ஏற்படும்.
கே.ராஜேஸ், கார் டிரைவர், ஏழாயிரம்பண்ணை

கூடுதல் சிரமமே
கொரோனாவால் தொழில் பாதிப்புகள் உள்ளநிலையில் பெட்ரோல், டீசல் விலை

உயர்வால் பொதுமக்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். அதிலும் பல வாகனங்களை வைத்து தொழில்புரியும் நிறுவனங்கள் தாங்கமுடியாதஅளவிற்கு பாதிக்க

படுவார்கள். பொருட்கள் விலையுயர்ந்து அடித்தட்டு மக்களும் சிரமத்திற்கு ஆளாவார்கள்.
சங்கரநாராயணன், சுயதொழில்முனைவோர், ஸ்ரீவில்லிபுத்துார்

வருவாயில்துண்டு விழுகிறது

சிறிய தொகையாகினும் மாதத்திற்கு கணக்கெடுத்தால் வருவாயில் துண்டு விழுந்து விடுகிறது. ஏற்கனவே கொரோனா பாதிப்பினால் பள்ளிகள் திறக்காதது, திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறாமல் சவாரியின்றி செலவுக்கு வழியின்றி திண்டாடுகிறோம். மருத்துவமனை

உள்ளிட்டஅவசர தேவைகளுக்கு வரும் குறைந்த சவாரிகளை வைத்து சமாளிக்கும் சூழலில் இது போன்ற விலையேற்றம்சிக்கலை ஏற்படுத்துகிறது.
அழகுராஜன், ஆட்டோ டிரைவர், ராஜபாளையம்

நடுத்தர மக்கள் பாதிப்பர்

பெட்ரோல் ,டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் நடுத்தர மக்கள் அதிகளவில்

பாதிக்கின்றனர். இப்படியே போனால் டூவீலர், கார்களை கவுரவத்திற்காக மட்டுமே வைத்து

இருக்க முடியும். காய்கறிகள், மளிகை சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மக்களிடம்

வாங்கும் சக்திகுறைந்துள்ள நிலையில் இதன் விலை உயர்வால்சாமானிய மக்களும்

சிரமப்படுவர்.தவபாலன், பேராசிரியர், சிவகாசி

பயத்தை ஏற்படுத்துகிறது

சிவகாசி, அருப்புக்கோட்டை உட்பட மாவட்டத்தின் பல பகுதி களில் பணிபுரிவோர் பலர் கொரோனா அச்சம் காரணமாக டூவீலரிலே சென்று வருகின்றனர். ஏற்கனவே

பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் இவர்களுக்கு பெட்ரோல் விலையேற்றம் கூடுதல் சுமையே. இப்படியே விலை கூடி கொண்டே போனால் எதிர்காலத்தை நினைத்து பயம்

ஏற்படுகிறது.நாகேந்திரன், தனியார் ஊழியர்,வீரமணிகண்டன்.

கஷ்டத்திற்கு மேல் கஷ்டம்

ஏற்கெனவே கொரோனாவால் வேலையின்றி சிரமத்தில் உள்ளோம். பொதுமக்களும்

கார்களை பயன்படுத்த தயங்குகின்றனர். இந்நிலையில்பெட்ரோல் விலை உயர்ந்து
மேலும் கஷ்டத்தை கொடுக்கிறது. பத்து நாட்களில் இதன் விலையும் சிறிது
சிறிதாக கூடியுள்ளது. வாடிக்கையாளர்களிடம் கட்டணத்தை கூட உயர்த்தி கேட்க முடியாத

நிலை உள்ளது. என்ன செய்வது என்றே தெரியவில்லை.மோகன்வேல், கார் டிரைவர், அருப்புக்கோட்டை

நாங்கள்தான் பாதிக்கிறோம்

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்கிறது. எங்களால் வாடகையை ஏற்ற முடியவில்லை. கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவசரமாக

செல்வோர், முடியாதவர்கள், வயதானவர்கள் தான் ஆட்டோவை நாடுகின்றனர். ஆட்டோ தொழில் நலிவடைந்து உள்ள நிலையில் அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் எப்படி

கட்டணத்தை உயர்த்துவது. நாங்கள்தான் பாதிக்கிறோம்.
முத்து, ஆட்டோ டிரைவர், காரியாபட்டி

Related posts

Leave a Comment