சறுக்கும் மணல்; அலறவிடும் ஆக்கிரமிப்பு:சிரமத்தில் ஸ்ரீவி., வாகனஓட்டிகள்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் நகருக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சேரும் மணல்குவியல், பஜார் வீதியில் நிலவும் ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தினமும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இங்குள்ள அரசு பஸ் டெப்போவிலிருந்து ராமகிருஷ்ணாபுரம், மாரியம்மன்கோயில்,
உழவர்சந்தை, சர்ச் சந்திப்பு, தேரடி, திருப்பாற்கடல் வழியாக மடவார்வளாகம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மணல்குவியல்கள் சேர்ந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மணல் குவியல்களை அப்புறபடுத்தினாலும் மீண்டும்,

மீண்டும் சேர்ந்து டூவீலர்கள் மற்றும் சைக்கிள்களில் செல்வோரை விபத்திற்கு

ஆளாக்குகிறது.
பஸ் ஸ்டாண்ட், சாத்துார் ரோடு, ராமகிருஷ்ணாபுரம், வடக்கு மற்றும் கிழக்கு ரதவீதிகளில் வாகனங்கள் ரோட்டின் இருபுறமும் நிற்பதால் நடந்து செல்பவர்கள் பாதிக்கிறார்கள்.


அடிக்கடி அள்ள வேண்டும்

தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் மணல் குவியல்களால் சைக்கிள், டூவீலர்களில் செல்லும் பெண்கள், முதியவர்கள் சறுக்கி விழுகின்றனர். இதை கருதி யாவது மணல்குவியல்களை அடிக்கடி அள்ளவேண்டும்.

சரவணதுரை

தொழில்முனைவோர் ஒழுங்குபடுத்தவேண்டும்

அதிகரித்து வரும் வாகன

பயன்பாடுகளால் பஜார் வீதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மாலை

நேரங்களில் ரதவீதிகளை கடக்கமுடியவில்லை. அதிவேகத்தில் வரும் வாகனங்களால் அடிக்கடிவிபத்துகள் ஏற்படுகிறது.

ஸ்ரீனிவாசன், தனியார் ஊழியர்

ஸ்ரீவில்லிபுத்துார்

கட்டுப்படுத்துங்கள்

நகரில் வாகனம், மக்கள் தொகையும் அதிகரித்து விட்டது. அதேநேரம் ஆக்கிரமிப்புகள் அகற்றி பல ஆண்டுகளாகி விட்டதால் நகரில் நெருக்கடி அதிகரிக்கிறது. கிராமங்களிலிருந்து மக்கள் மிகுந்த சிரமமடைகின்றனர்.

தேன்கனி, சுயதொழில்
ஸ்ரீவில்லிபுத்துார்

உடனடி நடவடிக்கை

தேசிய நெடுஞ்சாலையில் குவியும் மணல்குவியல்கள் உடனடியாக அகற்றப்படும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து சர்வே எடுத்து வருகிறோம்.

ஆனந்தகுமார், உதவி இயக்குனர்
தேசிய நெடுஞ்சாலை

Related posts

Leave a Comment