தமிழ் வார்த்தைகளை இடமிருந்து எழுதும் ஸ்ரீவி.,பெண்

ஸ்ரீவில்லிபுத்துார்:மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தங்களின் வழக்கமான வாழ்க்கை சூழலை தாண்டி ஏதாவது ஒரு துறையில் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில் தமிழ் வார்த்தைகளை இடப்பக்கமிருந்து வலப்பக்கமாக எழுதுகிறார் ஸ்ரீவில்லிபுத்துார் கிருஷ்ணன்கோயில் தெரு ஜே.எஸ்.நகரில் வசிக்கும் ஆசிரியர் பாக்கியராஜ் மனைவி பாக்கியலட்சுமி 32. மதுரை கான்சாகிபு மேட்டுதெரு அவ்வையார் பெண்கள் பள்ளியில் படிக்கும்போதே தமிழின் மீதான ஆர்வத்தால் ஏதேச்சையாக ஒருநாள் தமிழ் வார்த்தைகளை இடப்பக்கமிருந்து வலப்பக்கமாக எழுதி அதனை கண்ணாடியில் பார்க்க அந்த வார்த்தைகள் தெளிவாக பிரதிபலித்தது. அன்று முதல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இடமிருந்து வலமாக எழுதும் பழக்கத்தை இன்று வரை தொடர்கிறார்.

பாக்கியலட்சுமி கூறியதாவது: நான் 9ம் வகுப்பு படிக்கும்போதே தமிழ் எழுத்துகள் மீதுள்ள ஆர்வத்தால் இடமிருந்து வலமாக எழுதி கண்ணாடியில் பார்த்து மகிழ்வேன். தற்போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டில் எழுதி வருகிறேன். இதை ஒரு பொழுதுபோக்காக நினைத்து எழுதி வருகிறேன்,என்றார்.

Related posts

Leave a Comment