ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! அழைக்கும் சில்க் போர்டு நிர்வாகம்

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி – பி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பி.டெக் டெக்ஸ்டைல் டெக்னாலஜி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்ட்ரல் சில்க் போர்டு மேலாண்மை : மத்திய அரசு பணி : விஞ்ஞானி – பி மொத்த காலிப் பணியிடம் : 15 கல்வித் தகுதி : பி.டெக் டெக்ஸ்டைல் டெக்னாலஜி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://csb.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Member-Secretary, Central Silk Board, Ministry of Textiles, Government of India, Hosur Road, B.T.M. Layout, Madiwala, Bangalore – 560 068. விண்ணப்பிக்க வேண்டிய தேதி : 17.07.2020 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.csb.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Related posts

Leave a Comment