பெண்குயின்

நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இசை சந்தோஷ் நாராயணன் ஓளிப்பதிவு கார்த்திக் பழனி விமர்சிக்க விருப்பமா?நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான ரிதம் (கீர்த்தி சுரேஷ்), கணவன் கவுதமுடன் (மாதம்பட்டி ரங்கராஜ்) வாழ்ந்து வருகிறார். ஆனால் அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி அஜய் (அத்வைத்) என்றொரு குழந்தை உண்டு. அந்தக் குழந்தை சிறுவயதில் காணாமல் போனதால், முந்தைய கணவனுடன் (லிங்கா) விவாகரத்து செய்துவிட்டு, கவுதமை திருமணம் செய்துகொண்டிருக்கிறாள் ரிதம். இந்த நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு, காணாமல் போன குழந்தை அஜய் கிடைத்துவிடுகிறேன். ஆனால், அவன் எதையும் பேச முடியாத நிலையில் இருக்கிறான். அஜய்யை கடத்தியவன் முகமூடி அணிந்தவாறு வந்து மீண்டும், மீண்டும் மிரட்டுகிறான். அந்தக் கடத்தல்காரன் யார், அவன் எதற்காக குழந்தையைக் கடத்துகிறான் என்பதை ரிதம் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. ரிதம் கதாபாத்திரத்தில்…

Read More

ஜூலை முதல் வாரத்தில் பிளஸ்2 ரிசல்ட்!

சென்னை: ‘பிளஸ் 2 தேர்வு முடிவுகள், ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும்’ என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வுகள், கொரோனா வைரஸ் பிரச்னைக்கு மத்தியில் நடத்தப்பட்டு, மார்ச், 24ல் முடிந்தன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்டோர், இந்த தேர்வை எழுதினர். தேர்வின் விடைத்தாள்கள் திருத்தம், இரண்டு வாரங்களுக்கு முன் முடிந்தது. இதை தொடர்ந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.  மதிப்பெண் பட்டியல் ஒவ்வொரு விடைத்தாளுக்கும் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு, இறுதி மதிப்பெண் பட்டியல், இம்மாத இறுதியில் தயார் செய்யப்படும். இந்நிலையில், ஜூலை முதல் வாரத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் முடிந்து, மதிப்பெண்…

Read More

இரும்பு கடையில் தீ

சிவகாசி: சிவகாசி அண்ணாதுரை காய்கறி மார்க்கெட் அருகே கொட்டப்பட்ட கழிவுகளுக்கு  தீ வைத்தனர். தீயானது முருகனுக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் பற்றி எரிந்தது. தீயணைப்பு அலுவலர் பாலமுருகன் தலைமையில்வீரர்கள் அணைத்தனர்.

Read More

சுற்றுச்சுவர் இன்றி குடிமகன்கள் கும்மாளம் தவிப்பில் டி.ஆர்.வி., சாலை பகுதி மக்கள்

அருப்புக்கோட்டை:ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்று சுவர் இல்லாததாலும் தெரு விளக்குகள் இன்றி இருளாக இருப்பதால் ‘குடிமகன்கள்’ குடித்து கும்மாளமிடுவதால் அருப்புக்கோட்டை டி.ஆர்.வி., சாலை பகுதி மக்கள் தினமும் பாதிப்பை சந்திக்கின்றனர்.  இப்பகுதியின் தலையாய பிரச்னையே இங்குள்ள ‘டாஸ்மாக்’ கடை தான். இதனால் இங்கு ‘குடிமகன்கள்’ தொல்லை அதிகமாக உள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கப்பட்டது. இப்பகுதியை சுற்றிய கணேஷ் நகர், கஞ்சநாயக்கன்னப்படி, ஆத்திபட்டி, ஜெயராம் நகர் உள்ளிட்ட பகுதி மக்களும் சிகிச்சைக்கு வருகின்றனர். இதன் அருகிலே டாஸ்மாக் இருப்பதால் சிகிச்சைக்கு நோயாளிகள் அச்சத்துடனே வர வேண்டியுள்ளது. இரவில் தெரு விளக்கு வசதி இல்லாததால் இப்பகுதி வழியாக செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர்.  ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்று சுவர் இல்லாமல் பாதுகாப்பு கேள்விகுறியாகிறது. குடிமகன்கள் இங்கு வந்து குடிப்பதோடு போதையில்…

Read More

அன்று தொழிலாளி இன்று முதலாளி சுய தொழிலில் சாதிக்கும் இன்ஜினியர்

காரியாபட்டி:வேலை இல்லாத இளைஞரை தொழில் முனைவோராக்க அரசு மானியம் வழங்கி ஊக்குவித்து வருகிறது. அந்தவகையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த காரியாபட்டி அருகே உலக்குடியை சேர்ந்த இன்ஜினியர் ராமச்சந்திரன் 10 பேருக்கு வேலை வழங்கும் வகையில் தனியாக தொழில் தொடங்கி தனது கனவை நிறைவேற்றி உள்ளார்.  இவர் காரியாபட்டியில் மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வரும் இவர் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக திகழ்கிறார்.  ராமச்சந்திரன் கூறியதாவது: தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். சுயதொழில் செய்து பலருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் வெளியேறினேன். என்ன தொழில் செய்யலாம் என யோசித்தபோது தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு அத்தியாவசிய பொருள் தொழில் செய்ய எண்ணினேன். அதன்படி அரசு மானியத்தில் லோன் வாங்கி மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து 300, 500 எம்.எல்., 1,2,…

Read More

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காளான் : உண்டாலே மாயமாகுது நோய்கள் பல

அருப்புக்கோட்டை:காளான்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக உள்ளது. புரதம், நார்ச்சத்து, கனிம சத்துக்கள், வைட்டமின் பி, சி அதிகம் உள்ளது. விவசாய பயிர் கழிவு பொருட்களை பயன்படுத்தி காளான்கள் வளர்க்கப்படுகின்றன. இதை கொண்டு தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மார்க்கெட்டில் நல்ல விலைக்கு போகின்றன.  ஜீரண சக்தி, மூல வியாதி, ரத்த கொதிப்பு, இருதயம் உள்ளிட்ட நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. நீரிழிவு, உடல் பருமன், புற்று நோய் செல்களை குறைக்கும் சக்தியும் இதற்கு உண்டு. இதை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் நோயின்றி வாழலாம். இத்தகைய காளான்களை அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் விதவிதமான ரகங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை உற்பத்தி செய்யும் முறை, சந்தை படுத்துவது, மதிப்பு கூட்டி பொருட்களாக விற்பது உள்ளிட்ட பலவித பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.  காளான் பயிற்சியாளர் மாரீஸ்வரி கூறியதாவது: மாதம்தோறும் 10…

Read More

பணிகள் ஆய்வு

ராஜபாளையம்:ராஜபாளையம் பகுதியில் குடிமராமத்து பணிகளை பொதுப்பணித்துறை சிறப்பு தலைமை பொறியாளர் ஞானசேகரன் ஆய்வு செய்தார். செயற்பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர்கள் சந்திரமோகன், தினேஷ் ,விவசாய சங்க பொறுப்பாளர்கள் பாஸ்கர், மூக்கன்,லிங்கம் உடனிருந்தனர்.

Read More

குடிநீர் பிரச்னை ஆலோசனை

விருதுநகர்:விருதுநகரில் ஒன்றிய குடிநீர் பிரச்னையை சமாளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சுமதி ராஜசேகர், துணைத்தலைவர் முத்துலட்சுமி, பி.டி.ஓ.,க்கள் சீனிவாசன், ராஜசேகர், ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

Read More

உதவி கேட்டு முறையீடு

விருதுநகர்: மாவட்ட போட்டோ, வீடியோகிராபர்ஸ் அசோசியேஷன் சார்பில் கலெக்டர்  கண்ணனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கில் புகைப்பட  கலைஞர்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். திருமணமண்டபங்களில் சுப நிகழ்ச்சிகள் நடக்க அனுமதிக்க வேண்டும். மீண்டும் தொழில் துவங்கும் வரை மாதம் ரூ.2 ஆயிரம் உதவி வழங்க வேண்டும்.நிதி நிறுவனங்கள் மாத தவணையை கட்டாயமாக வசூலிப்பதால் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என, கேட்டுள்ளனர்.

Read More