கலக்கம் : ஊராட்சி தூய்மை பணிகளில் தொய்வு; தலை தூக்கும் சுகாதாரக்கேடால் நோய்

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சிகளில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பை அகற்றல் போன்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சுகாதாரமும் கேள்விகுறி

ஆகுவதால் நோய்கள் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற கலக்கத்தில் மக்கள் உள்ளனர். 

மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் பணியாளர்கள் போதிய அளவில் இல்லை. முதல்நிலை ஊராட்சிகளில் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ,மற்ற ஊராட்சிகளில் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மக்கள் தொகை உள்ளது. ஆனால் எந்த ஊராட்சியிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப துாய்மை பணியாளர்கள், ஆப்பரேட்டர்கள் இல்லை. 40 சதவீதம் பணியாளர்களே உள்ளனர். இதனால் குப்பை சேகரித்தல் சாக்கடை துார்வாருதல் உள்ளிட்ட பணிகளில் பாதிப்பு தொடர்கிறது. 

ஏற்கனவே பணியில் இருந்த பலர் ஓய்வு பெற்றுள்ளனர். சிலர் இறந்துள்ளனர். இவர்களுக்கு பதிலாக எந்த ஊராட்சியிலும் புதிய பணியாளர்கள் நியமனம் இல்லை. இதனிடையே ஒவ்வொரு ஊராட்சியிலும் குப்பை சேகரிக்க வாகனங்கள், குப்பை வண்டிகள் வாங்கப்பட்டு உள்ளது. இந்த வாகனங்களை இயக்குவதற்கு கூட தற்போது ஆட்கள் இல்லை. இதனால் பல ஊராட்சிகளில் வாகனங்கள் பயன்பாடின்றி உள்ளன. 

தற்காலிக தினசரி ஊதியத்தில் பணி நியமனம் செய்யலாம் என்றால் கூட சம்பளம் வழங்க நிதியின்றி ஊராட்சிகள் திணறுகின்றன. மூன்று ஆண்டுகளாக ஊராட்சி தலைவர்கள் இல்லாமல் பணிகளில் கவனம் செலுத்தாத நிலையில் தற்போதும் அதே நிலையே உள்ளதால் மக்கள் பாதிக்கின்றனர். 

நடவடிக்கை எடுங்க 

ஊராட்சிகளில் புதிய பணியாளர்கள் நியமிக்காததால் துாய்மை பணிகள் சரிவர நடைபெற வில்லை. சுகாதாரம் என்பது கிராமங்களில் இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது. போதிய பணியாளர்களை நியமனம் செய்து பணிகள் தொய்வின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தங்கப்பாண்டியன், தனியார் ஊழியர், சிவகாசி,

Related posts

Leave a Comment