நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காளான் : உண்டாலே மாயமாகுது நோய்கள் பல

அருப்புக்கோட்டை:காளான்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக உள்ளது. புரதம், நார்ச்சத்து, கனிம சத்துக்கள், வைட்டமின் பி, சி அதிகம் உள்ளது. விவசாய பயிர் கழிவு பொருட்களை பயன்படுத்தி காளான்கள் வளர்க்கப்படுகின்றன. இதை கொண்டு தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மார்க்கெட்டில் நல்ல விலைக்கு போகின்றன. 

ஜீரண சக்தி, மூல வியாதி, ரத்த கொதிப்பு, இருதயம் உள்ளிட்ட நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. நீரிழிவு, உடல் பருமன், புற்று நோய் செல்களை குறைக்கும் சக்தியும் இதற்கு உண்டு. இதை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் நோயின்றி வாழலாம். இத்தகைய காளான்களை அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் விதவிதமான ரகங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை உற்பத்தி செய்யும் முறை, சந்தை படுத்துவது, மதிப்பு கூட்டி பொருட்களாக விற்பது உள்ளிட்ட பலவித பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. 

காளான் பயிற்சியாளர் மாரீஸ்வரி கூறியதாவது: மாதம்தோறும் 10 ம் தேதி காளான் வளர்ப்பு வகுப்பு நடைபெறுகிறது. பயிற்சி பெற்ற பலர் இதை நிரந்தர தொழிலாக செய்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர், என்றார். தொடர்புக்கு 0456622 0562.

Related posts

Leave a Comment