இதுதான் நீங்கள் பிறந்த மண்ணிற்கும் சொந்தங்களுக்கும் செய்யும் உதவி…

வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு வருகிற சகோதர சகோதரிகளே.,உங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால்.. நீங்கள் ஊருக்குள் வருமுன் தயவுசெய்து மாவட்டம் அல்லது நகர் எல்லையில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அரசின் அனுமதியுடன் உங்களை நீங்களே தனிமைப்படுத்தி கொள்ள முன் வாருங்கள்.. உங்கள் பரிசோதனை முடிவுகள் 24 முதல் 48 மணி நேரத்தில் வந்து விடும். நெகட்டிவ் என்றால் சந்தோஷமாக நீங்கள் வீட்டிற்கு வந்து விடலாம்.. பாஸிட்டிவ் என்றால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படும்.. இதனை மீறி நீங்கள் குறுக்கு வழியில் ஊருக்குள் வந்து அதன் பின்னர் உங்களுக்கு பாஸிட்டிவ் என தெரிய வந்தால் பாதிப்பு உங்களுக்கு மட்டுமல்ல. .. உங்கள் குடும்பத்தினருக்கும்…சொந்தங்களுக்கும்…நண்பர்களுக்குமே…நீங்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள அனைவருமே பாதிக்கப்படுவார்கள்.. எனவே வெளியூரில் புறப்படும் முன்பே சோதனை செய்து விட்டு சொந்த ஊருக்குள் வாருங்கள்.. இல்லையெனில் எல்லையில்…

Read More

முகாம்களில் நெருக்கடி: தவிக்கும் அதிகாரிகள்

ஸ்ரீவில்லிபுத்துார்:தனிமை முகாம்களில் வீடுகளை போல் வசதிகளை எதிர்பார்ப்பதாலும், அதிகளவில் தனிமைபடுத்துபவர்களை தங்க வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்னை செய்வதாலும் அவர்களை சமாளிக்க முடியாமல் வருவாய்த்துறையினர் தவிக்கின்றனர். கொரோனா பரவ லால் விருதுநகர் மாவட்டம் வரும்இவர்களை மாவட்ட எல்லையில் தடுத்து தனிமை முகாம்களுக்கு அனுப்புகின்றனர். இங்கு சாதாரணமானவர்களை சமாளிக்கும் துறை அதிகாரிகள் வசதி உள்ளவர்களை சமாளிப்பதில் சிரமம் கொள்கின்றனர். ‘ஏசி’ மற்றும் கழிப்பறையுடன் கூடிய தனிஅறை, ஓட்டல் சாப்பாடு கேட்டு வாக்குவாதம் செய்கின்றனர். ஒவ்வொரு தாலுகாவிலும் தனிமை முகாம்கள் இருந்தும் மாவட்ட எல்லை முகாம்களில் தங்கவைப்பதால் இடநெருக்கடி ஏற்படுகிறது.இதை தவிர்க்க தாலுகா தனிமை முகாம்களில் தங்கவைக்கலாம். இதோடு உடனடியாக பரிசேதனை செய்து பாதிப்பில்லாதவர்களை வீட்டு தனிமைக்கு அனுப்பி கண்காணிக்கவேண்டும். இல்லையெனில் அதிகரிக்கும் எண்ணிக்கையால் வருவாய், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சிரமங்கள் அதிகரிக்கும். மாவட்ட நிர்வாகம்தான் திட்டமிடலுடன் செயல்படவேண்டும்.

Read More

ரூ.1.71 கோடி கடன் உதவி

சிவகாசி:சிவகாசி திருத்தங்கலில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடன் உதவித்திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 255 மகளிர் குழுக்களுக்கு ரூ.1.71கோடி கடன், கட்டுமான வாரியம் மூலம் 432 தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் மதிப்பு பாதுகாப்பு உபகரணங்கள்,ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளிகளில் அதிக தேர்ச்சிக்கு உதவிய 14 ஆசிரியர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார். ஒன்றிய செயலாளர் பலராம், நகர செயலாளர் பொன்சக்திவேல், கூட்டுறவு வங்கி தலைவர்கள் மயில்சாமி, ரமணா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சுபாஷினி கலந்து கொண்டனர்.

Read More

கடனுக்கு அவகாசம் கொடுங்க

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுததுார் திருவண்ணாமலை ஊராட்சி ஆலடிப்பட்டி மகளிர் குழுவினர் கலெக்டர் கண்ணனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நிதி நிறுவனங்கள், வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றுள்ளோம். ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடன் செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டோம். தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் முழுவீச்சில் பணிகள் நடக்காததால் குறைந்த வருவாய் மூலமே குடும்பத்தை சமாளிக்கிறோம். மேலும் இரு மாதங்களுக்கு அவகாசம் கொடுத்தால் அதன் பின் முறையாக தவணை தொகையை செலுத்த துவங்கிவிடுவோம், என கேட்டுள்ளனர்.

Read More

சதுரகிரி கோயில் உண்டியல் திறப்பு

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. சுந்தரமகாலிங்கம் கோயிலில் ரூ.17 லட்சத்து 79 ஆயிரத்து 424, 1.5 கிராம் தங்கம்,154கிராம் வெள்ளி, சுந்தரமகாலிங்கம் கோயிலில் ரூ.ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 171, ஒரு கிராம் தங்கம், 45 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. மதுரை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயன், ஆய்வாளர் மதுசூதனன், செயல் அலுவலர் விஸ்வநாதன் பங்கேற்றனர்.

Read More

கபசுர குடிநீர் வழங்கிய எம்.எல்.ஏ.,

சிவகாசி:சிவகாசி அனுப்பன்குளத்தில் துாய்மை பணியாளர்களுக்கு ஓமியோபதி மருந்து , கபசுர குடிநீரை சாத்துார் எம்.எல்.ஏ., ராஜவர்மன் வழங்கினார். குப்பை சேகரிக்கும் வாகனங்களை துவக்கி வைத்த அவர் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் தீயணைப்பு வாகனம் மூலமாக கிருமி நாசினி தெளித்தார். ஊராட்சி தலைவர் கவிதாபாண்டிராஜ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.

Read More

கோடையிலும் கடல் போல் தண்ணீர்: நிலத்தடி நீரை காக்கும் கிராம மக்கள்

விருதுநகர் அனல் கக்கும் விருதுநகரில் எப்போதாவது மழை பெய்யும் போது தாக வேட்கையில் இருக்கும் பூமியானது மழை நீரை முழுமையாக உறிஞ்சி விடுகிறது. மழை நீரை தக்க வைக்கவும் அதன் மூலம் நிலத்தடி நீராதாரத்தை காக்க விருதுநகர் அழகாபுரி மக்கள் ஊரின் நடுவே கண்மாய் அமைத்து நீராதாரத்தை பெருக்கி வருகின்றனர். அழகாபுரி வெங்கடசாமி நாயக்கர் பிரிட்டிஷ் ஆட்சியில் அமைத்த இதில் மழை போது காட்டாற்று வெள்ளம் பாயும் வகையில் வரத்து வாய்க்கால்வாய்களை கிராம மக்கள் உதவியுடன் வெட்டினார். அவற்றை பராமரிக்கும் பொறுப்பை பொதுப்பணித்துறையும் ஏற்றது. மழைக்காலங்களில் கண்மாயை நிரப்ப இதன் உபரி நீர் தாதம்பட்டி கண்மாயை நிரப்புகிறது. சுய சார்பு சிந்தனையுடன் கிராம மக்களை இணைத்து கண்மாய் அமைத்ததால் பல ஆண்டுகளை கடந்தும் வெங்கடசாமி நாயக்கர் பெயர் நிலைத்து நிற்கிறது. இதன் பயன் சமீபத்தில் பெய்த கோடை…

Read More

Thangam Thennarasu Indian Politician

திருச்சுழி சட்டமன்ற தொகுதிநரிக்குடி தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட பிள்ளையார்நத்தம், மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் தன் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட நியாயவிலைகடை,குடிநீர்த்தொட்டி,கலையரங்கத்தை  #தங்கம்_தென்னரசு B.E.,MLA அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்…😍😍😘😘

Read More

செய்திகள் சில வரிகளில்…விருதுநகர்

உண்டியல் திறப்பு ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு அறநிலையத்துறை உதவி ஆணையர் கணேசன் தலைமையில் காணிக்கை எண்ணும்பணி நடந்தது.ரூ.12 லட்சத்து 23 ஆயிரத்து 359, 36 கிராம் தங்கம், 306 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. செயல் அலுவலர் இளங்கோவன், ஆய்வாளர் பாண்டியன் மற்றும் கோயில் ஊழியர்கள் பங்கேற்றனர். வீரர்களுக்கு அஞ்சலி ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் இந்துமுன்னணி சார்பில் சீன ராணுவத்தின் தாக்குதலுக்கு பலியான இந்திய வீரர் ராமநாதபுரம், பழனி மறைவுக்கு அஞ்சலி செலுத்தபட்டது. மாவட்ட தலைவர் யுவராஜ், பொதுசெயலர் சுரேஷ், பா.ஜ.,நிர்வாகிகள் பங்கேற்றனர். பூமி பூஜை ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வெங்கடேஸ்வரபுரத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் கால்நடை மருத்துவமனை அமைப்பதற்கான பூமி பூஜை எம்.எல்.ஏ.,சந்திரபிரபா தலைமையில் நடந்தது. நிலவள வங்கி தலைவர் முத்தையா, கால்நடைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மரக்கன்றுகள் வழங்கல் ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் நகர காங்கிரஸ்…

Read More

மனசு வையுங்க : பயன் இல்லாத மின் விசை தொட்டிகள் சீர் செய்யாது வீணாகிறது மக்கள் பணம்

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டத்தில் பொது மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க போடப்பட்ட மின் விசை தண்ணீர் தொட்டிகள் அடிக்கடி பழுதாகி பயன் இல்லாமல் போவதால் அரசின் நோக்கம் வீணாகிறது. குடிநீரை தவிர்த்து அன்றாட தேவைகளான துணி துவைக்க, குளிப்பது உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்ய மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மின் விசை பம்புடன் கூடிய குடிநீர் தொட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றால் அந்தந்த பகுதி மக்கள் புழங்கல் தண்ணீர் தேவைக்கு குடங்களை துாக்கி செல்லும் நிலை குறைந்தது.ஆனால் இன்று பல இடங்களில் மோட்டார் பழுது, மின் இணைப்பு துண்டிப்பு, குழாய்கள் சேதம், பராமரிப்பு குறைவால் காட்சிப்பொருளாக மாறி உள்ளது. கவனிப்பாரின்றி பல இடங்களில் புதர்கள் சூழ்ந்து கிடக்கின்றன. குழாய்கள், மின் ஒயர்கள் காணாமல் போவதுடன் தொட்டிகளும் சேதமாகிறது.இதன் மூலம் தண்ணீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்த மக்கள் தற்போது குடிநீரை போல்…

Read More