கோடையிலும் கடல் போல் தண்ணீர்: நிலத்தடி நீரை காக்கும் கிராம மக்கள்

விருதுநகர் அனல் கக்கும் விருதுநகரில் எப்போதாவது மழை பெய்யும் போது தாக வேட்கையில் இருக்கும் பூமியானது மழை நீரை முழுமையாக உறிஞ்சி விடுகிறது. மழை நீரை தக்க வைக்கவும் அதன் மூலம் நிலத்தடி நீராதாரத்தை காக்க விருதுநகர் அழகாபுரி மக்கள் ஊரின் நடுவே கண்மாய் அமைத்து நீராதாரத்தை பெருக்கி வருகின்றனர்.

அழகாபுரி வெங்கடசாமி நாயக்கர் பிரிட்டிஷ் ஆட்சியில் அமைத்த இதில் மழை போது காட்டாற்று வெள்ளம் பாயும் வகையில் வரத்து வாய்க்கால்வாய்களை கிராம மக்கள் உதவியுடன் வெட்டினார். அவற்றை பராமரிக்கும் பொறுப்பை பொதுப்பணித்துறையும் ஏற்றது. மழைக்காலங்களில் கண்மாயை நிரப்ப இதன் உபரி நீர் தாதம்பட்டி கண்மாயை நிரப்புகிறது.

சுய சார்பு சிந்தனையுடன் கிராம மக்களை இணைத்து கண்மாய் அமைத்ததால் பல ஆண்டுகளை கடந்தும் வெங்கடசாமி நாயக்கர் பெயர் நிலைத்து நிற்கிறது. இதன் பயன் சமீபத்தில் பெய்த கோடை மழை கண்மாயை நிரப்பியது. மாவட்டத்தில் மற்ற கண்மாய்கள் அனைத்து வறண்டுள்ள நிலையில் இக்கண்மாயை சூழந்துள்ள மழை நீர் காற்றால் கடலை போல் தாலாட்டுகிறது.

வெங்கடசாமி நாயக்கர் பேரன் அருண் ராகுல் கூறியதாவது: ஊரணிக்குள் கிணறு அமைத்து மக்கள் குடிநீர் எடுத்து செல்கின்றனர். கடும் கோடையிலும் கிணற்றில் தண்ணீர் வற்றியது கிடையாது. கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு மூடி அமைத்து பாதுகாக்கப்படுகிறது. மத்திய அரசின் நீர் இயக்க மேலாண்மை’ (ஜல் சக்தி அபியான்) திட்டத்தின் மூலம் அழகாபுரி மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு மூலம் கண்மாய் 2019 ஆகஸ்ட்டில் துார் வாரப்பட்டது.

தற்போது வரத்து கால்வாய்களை பொதுப்பணித்துறை புனரமைத்தது. கண்மாய்க்குள் துணி வைக்க அனுமதியில்லை. கண்மாயை அசுத்தம் செய்யவதும் கிடையாது. குடிநீர் ஆதாரமாமே இக்கண்மாயை பாதுகாத்து வருகிறோம். நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் சுற்றுப்பகுதியில் தண்ணீருக்கு பஞ்சம் இல்லாத நிலை உள்ளது, என்றார்.

Related posts

Leave a Comment