செய்திகள் சில வரிகளில்…விருதுநகர்

உண்டியல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு

அறநிலையத்துறை உதவி ஆணையர் கணேசன் தலைமையில் காணிக்கை எண்ணும்பணி நடந்தது.ரூ.12 லட்சத்து 23 ஆயிரத்து 359, 36 கிராம் தங்கம், 306 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. செயல் அலுவலர் இளங்கோவன், ஆய்வாளர் பாண்டியன் மற்றும் கோயில்

ஊழியர்கள் பங்கேற்றனர்.

வீரர்களுக்கு அஞ்சலி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் இந்துமுன்னணி சார்பில் சீன ராணுவத்தின் தாக்குதலுக்கு பலியான இந்திய வீரர் ராமநாதபுரம், பழனி மறைவுக்கு அஞ்சலி செலுத்தபட்டது. மாவட்ட தலைவர் யுவராஜ், பொதுசெயலர் சுரேஷ், பா.ஜ.,நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பூமி பூஜை

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வெங்கடேஸ்வரபுரத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் கால்நடை மருத்துவமனை அமைப்பதற்கான பூமி பூஜை எம்.எல்.ஏ.,சந்திரபிரபா தலைமையில் நடந்தது. நிலவள வங்கி தலைவர் முத்தையா, கால்நடைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

மரக்கன்றுகள் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் நகர காங்கிரஸ் சார்பில் மரகன்றுகள், விதைகள்

வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைவர் வன்னியராஜ் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் தளவாய்பாண்டியன் மரகன்றுகளை வழங்கினார். மாவட்ட துணைச் செயலர்

பெரியசாமி, தகவல்பிரிவு மாநில செயலர் தமிழ்செல்வன், மாவட்ட செயலர் முருகேசன் பங்கேற்றனர்.

கடனுக்கு அவகாசம் கொடுங்க

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுததுார் திருவண்ணாமலை ஊராட்சி ஆலடிப்பட்டி மகளிர் குழுவினர் கலெக்டர் கண்ணனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நிதி நிறுவனங்கள், வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றுள்ளோம். ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடன் செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டோம். தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் முழுவீச்சில் பணிகள் நடக்காததால் குறைந்த வருவாய் மூலமே குடும்பத்தை சமாளிக்கிறோம். மேலும் இரு மாதங்களுக்கு அவகாசம் கொடுத்தால் அதன் பின் முறையாக தவணை தொகையை செலுத்த துவங்கிவிடுவோம், என கேட்டுள்ளனர்.

கயறு ஆலையில் தீ

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் தனியார் கயறு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு அலுவலர் சுந்தரராஜ் தலைமையில் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தேங்காய் நார்கள் எரிந்தது

Related posts

Leave a Comment