மனசு வையுங்க : பயன் இல்லாத மின் விசை தொட்டிகள் சீர் செய்யாது வீணாகிறது மக்கள் பணம்

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டத்தில் பொது மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க போடப்பட்ட மின் விசை தண்ணீர் தொட்டிகள் அடிக்கடி பழுதாகி பயன் இல்லாமல் போவதால் அரசின் நோக்கம் வீணாகிறது.

குடிநீரை தவிர்த்து அன்றாட தேவைகளான துணி துவைக்க, குளிப்பது உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்ய மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மின் விசை பம்புடன் கூடிய குடிநீர் தொட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றால் அந்தந்த பகுதி மக்கள் புழங்கல் தண்ணீர் தேவைக்கு குடங்களை துாக்கி செல்லும் நிலை குறைந்தது.ஆனால் இன்று பல இடங்களில் மோட்டார் பழுது, மின் இணைப்பு துண்டிப்பு, குழாய்கள் சேதம், பராமரிப்பு குறைவால் காட்சிப்பொருளாக மாறி உள்ளது.

கவனிப்பாரின்றி பல இடங்களில் புதர்கள் சூழ்ந்து கிடக்கின்றன. குழாய்கள், மின் ஒயர்கள் காணாமல் போவதுடன் தொட்டிகளும் சேதமாகிறது.இதன் மூலம் தண்ணீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்த மக்கள் தற்போது குடிநீரை போல் புழங்கல் நீரையும் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. மனிதர்கள் மட்டுமன்றி ஆடு, மாடு உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களும் தண்ணீர் இன்றி அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக செல்விடப்பட்ட அரசு நிதியும் வீணாகி உள்ளது.இதை செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் முயற்சிக்க வேண்டும்.

புத்துயிர் ஊட்டுங்க

உள்ளாட்சி பிரதிநிகளின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் விமரிசையாக ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டம் மக்களுக்கு கை கொடுத்த நிலையில் தற்போது மின் பழுதை சரி செய்யாமலும் பராமரிப்பு இல்லாமல் போடப்பட்டு ஆழ்துளை குழாய்களில் மண் மேவி விட்டது. மீண்டும் இவற்றை சரி செய்ய அதிக செலவாகும். அந்தந்த பகுதி மக்களின் பங்களிப்பு மூலம் செயல் படுத்த வேண்டும். இதோடு மழை நீர் சேரும்படியான கட்டமைப்பையும் ஏற்படுத்தி புத்துயிர் ஊட்ட அதிகாரிகள்முன் வர வேண்டும்.

மாரிமுத்து, ராஜபாளையம்.

Related posts

Leave a Comment