ரூ.1.71 கோடி கடன் உதவி

சிவகாசி:சிவகாசி திருத்தங்கலில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடன் உதவித்திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 255 மகளிர் குழுக்களுக்கு ரூ.1.71கோடி கடன், கட்டுமான வாரியம் மூலம் 432 தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் மதிப்பு பாதுகாப்பு உபகரணங்கள்,ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளிகளில் அதிக தேர்ச்சிக்கு உதவிய 14 ஆசிரியர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார்.

ஒன்றிய செயலாளர் பலராம், நகர செயலாளர் பொன்சக்திவேல், கூட்டுறவு வங்கி தலைவர்கள் மயில்சாமி, ரமணா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சுபாஷினி கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment