போலீஸ் செய்திகள்: விருதுநகர்

புகையிலை பதுக்கிய இருவர் கைது அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை டெலிபோன் ரோடு சிங்கார தோப்பு பகுதி வீட்டில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் எஸ்.ஐ.,க்கள் ராம்குமார், சீனிவாசன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். கட்டுக் கட்டாக புகையிலை பொருட்கள், போலி லேபிள் பீடி கட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்புரூ. 3.50 லட்சம். அதே பகுதி ஜெய பாலாஜி 26, மோகன் 32, கைதாகினர். சென்னை இளைஞர் மீது வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார்: சென்னை வேளச்சேரி தனியார் நிறுவன ஊழியர் முத்துகுமார். சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்தபோது அழகாபுரி செக்போஸ்ட்டில் விசாரித்து கிருஷ்ணன்கோவில் தனியார் கல்லுாரியில் முகாமில் தங்க வைக்கபட்டார் . பணியிலிருந்த வி.ஏ.ஓ., இந்திராகாந்தியை அரசுபணி செய்யவிடாமல் தடுத்ததோடு அரசு நிர்வாகத்தை விமர்சித்து பேசியபடி சமூக வலைதளங்களில் பதிவிட்டார். முத்து குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொழிலாளர்கள்…

Read More

மனதை தெளிந்த நீரோடையாக்கும் யோகா இன்று உலக யோகா தினம்

யோகாவின் பிறப்பிடமே இந்தியாதான்.பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்ட இதில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசனங்கள் உள்ளன. 2015 ஜூன் 21ல் முதல் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாசார முக்கியத்துவ பட்டியலில் யோகா சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. யோகாவானது இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய 8 நிலைகளை கொண்டுள்ளது. இந்த நிலைகளை கடந்தவர்களே யோகி ஆவார். யோகா செய்வதால் தேவையற்ற சிந்தனைகள் விலகி மனம் தெளிந்த நீரோடை போலாகிறது. யோகாவை மருத்துவமாகவும், தீர்வாகவும் பார்க்காமல் வாழ்வின் அன்றாடமாகவே கருத வேண்டும். இதை உணர்ந்தாலே உடலும், மனமும் சீராகும். தன்னம்பிக்கை தருகிறது 5 வயது முதல் பெற்றோரின் வழிகாட்டுதல் படி யோகா பயின்று வருகிறேன். மாநில அளவிலான போட்டியில் 3வது இடம் பெற்றேன். தற்போது தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று…

Read More

நியமனம்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் வடக்கு ஒன்றிய பா. ஜ., அமைப்பாளராக பாலகுரு நியமிக்கபட்டுள்ளதாக மேற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Read More

அன்புள்ள அப்பா… யாருமே இல்லை உன்னை போல்…:இன்று உலக தந்தையர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிற்று கிழமை தந்தையர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தன்னையே அர்ப்பணித்து குடும்பநலனை உயர்த்தும் தந்தைக்கு ஈடு யாருமில்லை. குடும்பம் என்ற கட்டமைப்பை தாங்கி பிடித்து அரணாய் காப்பது தந்தை தான். முன்பெல்லாம் அப்பா என்றால் சினிமாவில் கரடுமுரடான நபர் காட்டப்படுவார். ஆனால் தற்போது அதே சினிமாவில் தோழன் போல் பழகும் அப்பாக்கள் தான் காண்பிக்கப்படுகின்றனர். கால மாற்றத்திற்கேற்ப தந்தை, மகன், மகள் உறவும் மாறிவிட்டது. பிள்ளைகள் ஒரு விஷயம் செய்யும் போது என்னென்ன பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்பதை அறிந்தே கிணற்றுக்குள் கயிறை கட்டி நீந்த விடுவது போல் தந்தைகள் காக்கின்றனர். தான் வயிற்றில் 10 மாதம் சுமக்காத குறையாய் பிள்ளைகளை நெஞ்சிலும், முதுகிலும் சுமக்கும் தந்தைக்கு நிகர் தந்தையே. உலகின் உயர்ந்த உறவான தந்தையை போற்றுவோம். தந்தைதான் என் ஹீரோ எங்கள்…

Read More

குப்பையே இருக்காது : ஊராட்சி தலைவர் சபதம்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தை குப்பை இல்லா ஊராட்சியாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஊராட்சி தலைவர் அன்புராஜ் கூறினார். இவ்ஊராட்சியில் 8 தெருக்கள் உள்ளன. கண்ட இடங்களில் குப்பை கொட்டுவதை கண்ட ஊராட்சி தலைவர் முதற் கட்ட நடவடிக்கை யாக திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தெருவில் குப்பை தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்தார்.இங்கு சேரும் குப்பையை உடனுக்குடன் அகற்ற துாய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டிகள் வழங்கினார். மட்கும், மட்காத குப்பையை தொட்டியில் கொட்ட மக்களிடம் வலியுறுத்தி உள்ளார்.

Read More

மாணவர்களுக்கு வினாடி வினா

சிவகாசி: சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லுாரி இயற்பியல் துறை சார்பில் 2019 – 20 கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இரு நாள் இணைய வழி இயற்பியல் வினாடி வினா போட்டி நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 60 பள்ளிகளில் இருந்து 132 மாணவர்கள் பங்கேற்றனர். முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம் 3 பேருக்கு , 2 ம் பரிசாக ரூ 2 ஆயிரம் 3 பேருக்கு சான்றிதழ்களுடன் வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் சித்ரா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Read More

கவனமா இருங்க:விருதுநகர் மாவட்டத்தில் அதிகரிக்கிறது தொற்று; அஜாக்கிரதையுடன் வலம் வருவோரால் பாதிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்:வெளிமாவட்டங்களிலிருந்து திரும்புபவர்கள் அதிகரிக்க விருதுநகர் மாவட்டத்தில்கொரோனாவால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கையும் கூடுகிறது. பொது இடங்களில் தேவையற்ற நடமாட்டத்தை குறைத்து பரவலை தவிர்க்க மக்கள் முன் வர வேண்டும். கொரோனா ஊரடங்கை தொடர்ந்து மக்களின் வாழ்வாதரத்திற்காக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. தளர்வின் போது கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்புகளை மக்கள் கடைபிடிக்கவில்லை என்பதை பஜார்களில் நேரடியாக பார்க்கமுடிகிறது.அவசியம் இருந்தால் மட்டுமே முககவசம் அணிந்து வெளியில் வாருங்கள் என அரசு அறிவுறுத்தியும் தினமும் ஏராளமானவர்கள் குழந்தைகளுடன் வலம் வருகின்றனர். எந்தகடைகளிலும் சமூக இடைவெளி இல்லை. பஸ்களிலோ பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவது ஒருவர் மட்டுமல்ல அவரின் குடும்பம், வசிக்கும் தெருமக்களும் தான் என்பதை பலரும் உணர்வதில்லை.தற்போது சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு அமலுக்கு வந்தநிலையில் மாவட்டத்திற்குள் கிராம வழித்தடங்களில் பலுரும் வந்து விட்டனர். இவர்களை கண்டறிவதில் அரசுத்துறை அதிகாரிகள்…

Read More