கவனமா இருங்க:விருதுநகர் மாவட்டத்தில் அதிகரிக்கிறது தொற்று; அஜாக்கிரதையுடன் வலம் வருவோரால் பாதிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்:வெளிமாவட்டங்களிலிருந்து திரும்புபவர்கள் அதிகரிக்க விருதுநகர்

மாவட்டத்தில்கொரோனாவால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கையும் கூடுகிறது. பொது இடங்களில் தேவையற்ற நடமாட்டத்தை குறைத்து பரவலை தவிர்க்க மக்கள் முன் வர

வேண்டும்.

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து மக்களின் வாழ்வாதரத்திற்காக அரசு பல்வேறு

தளர்வுகளை அறிவித்தது. தளர்வின் போது கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்புகளை

மக்கள் கடைபிடிக்கவில்லை என்பதை பஜார்களில் நேரடியாக பார்க்கமுடிகிறது.அவசியம் இருந்தால் மட்டுமே முககவசம் அணிந்து வெளியில் வாருங்கள் என அரசு அறிவுறுத்தியும் தினமும் ஏராளமானவர்கள் குழந்தைகளுடன் வலம் வருகின்றனர்.

எந்தகடைகளிலும் சமூக இடைவெளி இல்லை. பஸ்களிலோ பயணிகளின் எண்ணிக்கை

அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவது ஒருவர் மட்டுமல்ல அவரின் குடும்பம்,

வசிக்கும் தெருமக்களும் தான் என்பதை பலரும் உணர்வதில்லை.தற்போது சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு அமலுக்கு வந்தநிலையில் மாவட்டத்திற்குள் கிராம

வழித்தடங்களில் பலுரும் வந்து விட்டனர். இவர்களை கண்டறிவதில் அரசுத்துறை அதிகாரிகள் திணறுகின்றனர்.

முன்ப தனிமை முகாமில் நுாற்றுக்கு மேற்பட்டோருக்கு சோதனை செய்தால் ஒரு

சிலருக்கே பாசிட்டிவ் வந்தது. ஆனால் தற்போது குறைந்தபட்சம் 10 பேர் வரை நோய்

தொற்றுக்கு ஆளாகின்றனர் . இதன் தீவிரத்தை உணராத பொதுமக்கள் எவ்வித

பாதுகாப்புமின்றி பஜார்களில் நடமாடுவது மிகுந்த அச்சத்தை எற்படுத்துகிறது.

வரும்முன் காப்பதே அவசியம்

நோய் பாதிப்பிலிருந்து தப்புவது நம்முடைய கைகளில் தான் உள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும். அவசியம் இருந்தால் முககவசம் அணிந்து செல்லவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். அதிலும் டூவீல ரில் குடும்பத்துடன் வருவதை தவிர்க்கவேண்டும்.வந்தபின் அவதிபடுவதை விட வரும் முன்காப்பதே அவசியம். முடிந்தளவிற்கு தனித்திருந்து பாதிப்பை தவிர்த்திடுவோம்.ராஜசேகர், ரோட்டரி நிர்வாகி, ஸ்ரீவில்லிபுத்துார்

Related posts

Leave a Comment