குப்பையே இருக்காது : ஊராட்சி தலைவர் சபதம்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தை குப்பை இல்லா ஊராட்சியாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஊராட்சி தலைவர் அன்புராஜ் கூறினார்.

இவ்ஊராட்சியில் 8 தெருக்கள் உள்ளன. கண்ட இடங்களில் குப்பை கொட்டுவதை கண்ட ஊராட்சி தலைவர் முதற் கட்ட நடவடிக்கை யாக திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தெருவில் குப்பை தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்தார்.இங்கு சேரும் குப்பையை உடனுக்குடன் அகற்ற துாய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டிகள் வழங்கினார். மட்கும், மட்காத குப்பையை தொட்டியில் கொட்ட மக்களிடம் வலியுறுத்தி உள்ளார்.

Related posts

Leave a Comment