விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்பை கண்டறியும் நவீன கருவி

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் “டோட்ரோனாட்“ என்ற கொரோனா பாதிப்பை கண்டறியும் நவீன கருவி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

விருதுநகர்:

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் “டோட்ரோனாட்“ என்ற கொரோனா பாதிப்பை கண்டறியும் நவீன கருவி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த கருவி மூலம் 2 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பை கண்டறிய வாய்ப்பு ஏற்படும். ஒரே நேரத்தில் சளி மூலம் 2 பேருக்கு சோதனை செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட நபருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்தால் மறுபரிசோதனை செய்ய தேவையில்லை. ஆனால் பாதிப்பு உள்ளது என தெரியவந்தால் மீண்டும் ஆர்.டி.பி.ஆர். கருவி மூலம் பாதிப்பை உறுதி செய்ய வேண்டும்.

இந்த கருவி மூலம் கொரோனா பாதிப்பு சோதனை நடத்துவதற்கு முன்னரே சிகிச்சைக்கு வந்த நபர் இறந்து விட்டாலோ அல்லது சிகிச்சை எடுக்கும் நபருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்தாலோ கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய வாய்ப்பு ஏற்படும். மேலும் பணியில் உள்ள டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறியவும் இந்த கருவி பயன்படும் என அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பிரகலாதன், அன்புவேல், அரவிந்த்பாபு ஆகியோர் கூறினர். 

Related posts

Leave a Comment