Corona Update for Tamilnadu

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு..! இன்று 2,710 பேருக்கு தொற்று உறுதி

🔲தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

🔲அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 2710 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது.

🔲மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 1,358 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,112 ஆக உயர்ந்துள்ளது.

🔲சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,487 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 42,752 ஆக உயர்ந்துள்ளது.

🔲தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 794 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

Leave a Comment