ஜூலை 31 வரை.. ஒரே போடு.. மேற்கு வங்கத்தில் ஊரடங்கை நீட்டித்த மமதா பானர்ஜி

கொல்கத்தா: ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மேற்கு வங்க மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல், நாடு முழுக்க பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது நாட்டில் ஐந்தாவது கட்ட ஊரடங்கு உள்ளது. ஜூன் மாதம் 30ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு காலகட்டம் நிறைவடையும். இதற்குப் பிறகு மத்திய அரசு எந்த மாதிரியான ஊரடங்கு கொண்டுவரும், அல்லது ஊரடங்கு இருக்காதா என்பது பற்றியெல்லாம் விவாதங்கள் வருகின்றன. ஆனால், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு தங்கள் மாநிலத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று, இன்று அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில், சில சலுகைகளும் வழங்கப்படும். அதேநேரம் ஊரடங்கு இல்லாமல் கொரோனாவை கட்டுபடுத்த முடியாது என்பதில்…

Read More

யூ டர்ன் போடும் தமிழகம்.. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக அதிகரிப்பு.. இனிதான் சேலஞ்ச்!

சென்னை: தமிழகம் மெல்ல மெல்ல ரிவர்ஸ் கியர் போட்டு வந்த பாதைக்கு திரும்பி கொண்டு இருக்கிறது. தளர்த்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் மீண்டும் அமலுக்கு வந்து விட்டன. மண்டலங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் அமலுக்கு வந்த இந்த ஊரடங்கு மிகக் கடுமையாக இருந்தது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்கு இயங்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. கொரோனா பரவல் அதிகரிப்பு தற்போது 5வது கட்ட ஊரடங்கு காலத்தில் நாம் இருக்கிறோம். இந்த காலகட்டத்தில் மிக அதிகமான தளர்வுகள் கொடுக்கப்பட்டன. அலுவலகங்கள் இயங்க ஆரம்பித்தன. மண்டலங்களுக்கு இடையே அரசு பஸ்கள் கூட இயங்க ஆரம்பித்து…

Read More

1000 ரூபாய் நிவாரண தொகையை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும்- அரசு உத்தரவு

1000 ரூபாய் நிவாரண நிதியை வீடுகளுக்கு சென்று மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை:கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் அரிசி ரேசன்கார்டு வைத்திருப்போருக்கு 1000 ரூபாய் நிவாரண உதவி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிவாரண உதவியை சம்பந்தப்பட்ட ரேசன் கார்டுதாரர்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக 22.06.2020 முதல் 26.06.2020 வரை ரேசன் கடைகள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில இடங்களில் ரேசன் கடைகளை திறப்பதாகவும், பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு சென்று வழங்கவில்லை என்றும் புகார் கூறப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று வழங்குவதற்கு பதிலாக, ஆங்காங்கே மொத்தமாக வரவைத்தும் நிவாரண உதவியை வழங்கி உள்ளனர்.இதனையடுத்து,…

Read More

அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலாகுமா?- கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த வரிசையில் மதுரை மாவட்டத்துக்கும் நள்ளிரவு முதல் வருகிற 30-ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேனி மாவட்டத்திலும் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பிற மாவட்டங்களிலும் கொரோனா அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர்…

Read More

எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல்

லடாக் எல்லையில் இருந்து படை களை வாபஸ் பெற இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இருநாட்டு ராணுவஅதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. புதுடெல்லி: லடாக்கின் கிழக்கே உள்ள பங்கோங் சோ ஏரி, டெம்சோக், கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் சீன ராணுவம் ஊடுருவியது. இதனால் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடந்த மாதம் 5 மற்றும் 6-ந் தேதிகளில் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து எல்லையில் நிலவிய பதற்றத்தை தணிக்க இருதரப்பும் முதலில் கீழ்மட்ட ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தின. பின்னர் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கடந்த 6-ந்தேதி ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. மோதல் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து படைகளை விலக்குவது என இருதரப்பும் ஒப்புக்கொண்டன. அதன்படி கல்வான் பள்ளத்தாக்கு, பங்கோங் சோ உள்ளிட்ட பகுதிகளில்…

Read More