நம்மை ஊக்கப்படுத்துவது பாராட்டுகள் தான்!

நம்மை ஊக்கப்படுத்துவது பாராட்டுகள் தான்!வயது, 14 தான். ஒரு கம்பெனிக்கு, சி.இ.ஓ., ஆனது எப்படி என, ‘டிரம்மர்’ சரண்: சென்னை அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்தவன் நான். ‘டிரம்ஸ் சர்க்கிள்’ என்ற நிறுவனத்தைத் துவங்கி இருக்கிறேன். இந்த வருஷம் ஒன்பதாம் வகுப்பு போறேன். பிசினஸ்மேன் ஆகணுங்கிறது தான் என்னோட ஆசை.இப்போ அது நிறைவேறிக்கிட்டு இருக்கு. என்னோட, ‘டிரம்ஸ் சர்க்கிள்’ கம்பெனிக்கு, நான் தான் சி.இ.ஓ.,அப்பா, ‘சர்ப்ரைஸ் பிளானிங்’ பிசினஸ் பண்ணிட்டு இருக்காங்க. அம்மா ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்கிறாங்க. தங்கச்சி லயாவுக்கு, 4 வயசு ஆகுது. ரொம்ப நல்லா பாட்டு பாடுவா.தட்டு, தம்ளரை வெச்சுத்தான், ஆரம்பத்தில தாளம் போட பழகினேன். என் ஆர்வத்தைப் பார்த்துட்டு டிரம்ஸ் வகுப்புல சேர்த்து விட்டாங்க. டிரம்ஸ் கத்துக்கிட்டது மட்டுமல்லாமல் பாங்கோ, ஜிம்பே, ககூன், பறை, டிரம்ஸ், துடும்புனு நிறைய கருவிகள் வாசிக்கக் கத்துக்கிட்டேன்.…

Read More

கொடுமைப்படுத்திய காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி: நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு

சென்னை: எமர்ஜென்சி காலத்தில் திமுக ஆட்சியை கலைத்து, அக்கட்சி நிர்வாகிகளை கொடுமைப்படுத்திய காங்கிரஸ் கட்சியுடன், இன்று கைகோர்த்துள்ளது. திமுகவும் காங்கிரஸ்சும் ஒரே மேடையில் கைகோர்த்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பா.ஜ., ஆட்சியின் சாதனைகள் குறித்து நிர்வாகிகள் மத்தியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:என்ன சாதனைகள் செய்துள்ளோம். மக்கள் நலனுக்கு என்ன செய்துள்ளோம் என்பதை மக்களிடம் எடுத்து சொல்வதற்கு கட்சிகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு நல்ல வாய்ப்பு. தனது பணியை மக்களிடம் விரிவாக எடுத்து சொல்வது கடமை. அந்த கடமையை செய்வதற்கு, இந்த வருடம் கொரோனா தடையாக உள்ளது. கொரோனா காரணமாக, மக்களிடம் செல்லவும், மக்களிடம் சென்று பேசும் வாய்ப்பை தடுத்து விட்டது. பிரதமர் மோடியின் முயற்சியால், கிராமத்தில் இணையதள வசதி வந்துள்ளது. இதனால், நமதுகருத்தை…

Read More

ஜனநாயகத்திற்காக போராடியவர்களை தேசம் மறக்காது: பிரதமர்

புதுடில்லி: அவசர நிலை காலத்தின் போது, ஜனநாயகத்தை பாதுகாக்க தியாகம் செய்தவர்களை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதன் 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு டுவிட்டரில் பிரதமர் வெளியிட்ட பதிவு 45 ஆண்டுகளுக்கு முன்பு , இதே நாளில் இந்தியாவில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போது, இந்தியாவில் ஜனநாயகத்திற்காக போராடியவர்கள் கொடுமைகளை அனுபவித்தனர். அவர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்தை தேசம் எப்போதும் மறக்காது என தெரிவித்துள்ளார். அதில் பிரதமர் கூறியதாவது: அவசர நிலை அமல்படுத்தப்பட்ட போது, எதிர்க்கட்சிகள், அரசியல் நடவடிக்கைகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அனைவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இழந்த ஜனநாயகம் வேண்டும் என மக்கள் கோபப்பட்டனர். ஒருவரிடம் இருந்து ஜனநாயக உரிமைகளை பறிக்கும் போது தான், அதன் மதிப்பை அவர் உணர்வார். அவசர…

Read More

மக்களை வேதனை வலையில் வீழ்த்தி விடாதீர்கள்: ஸ்டாலின்

சென்னை :’கொரோனா பேரழிவில் இருந்து, மக்களை காப்பாற்றுங்கள்; மக்களை வேதனை வலைக்குள் வீழ்த்தி விடாதீர்கள்’ என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: சென்னையில் மட்டும் அதிகம் பரவி வந்த கொரோனா தொற்று, ஒரு வாரமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவி வருகிறது. இதை தடுக்க வழியற்ற முதல்வர் இ.பி.எஸ்., கோவைக்கும், திருச்சிக்கும் பயணம் செல்கிறார். குடிமராமத்து பணிகளை பார்வையிடவும், இதர கட்டுமான பணிகளை பார்வையிடவும் செல்கிறார் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இதயம் மரத்து, இரக்கமற்ற தன்மை தலைக்கேறி, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வகையில், எதேச்சதிகாரம் பெருகி வருவதையே காட்டுகிறது.தமிழக மக்கள் இப்போது இருப்பது, மருத்துவ நிபுணர்கள் சொல்லும், கோல்டன் பீரியட்; இந்த நேரத்தில், ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். உங்களது அலட்சியத்தால், அக்கறை இன்மையால், தன்னிச்சையான அணுகுமுறையால்,இந்த, 90 நாட்களையும் வீணடித்தது போல,இனியும் வீணடித்து, மக்களை வேதனை…

Read More

நோயை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்: இ.பி.எஸ்.,

சென்னை:’பொது மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே, நோயை கட்டுப்படுத்த முடியும். எனவே, அரசின் வழிமுறைகளை பின்பற்றி, மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார். மாவட்ட கலெக்டர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளதாவது: சென்னையில், 87 லட்சம் பேர் வசிக்கின்றனர். குறுகலான தெருக்கள் அதிகம் உள்ளன. சிறிய வீடுகளில், அதிகம் பேர் வசிக்கின்றனர். பொது கழிப்பறையை பயன்படுத்துகின்றனர். இதனால், வைரஸ் தொற்று எளிதாக பரவுகிறது. கட்டுப்படுத்த, அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதியில், மக்களுக்கு தேவையான, அத்தியாவசிய பொருட்கள், அவர்களின் இடத்திற்கே சென்று வழங்கப்படுகின்றன. தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பொது கழிப்பறைகள், அடிக்கடி சுத்தம் செய்யப்படுகின்றன. இதற்கு, சென்னை மாநகர மக்கள், முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மாவட்டங்களில், நோய் பரவல் அதிகம் உள்ள பகுதியை, நோய் கட்டுப்பாட்டு…

Read More

நாலு வரி; நாலு படம்

விருதுநகர் மாவட்டம் கடும் வறட்சி காலங்களை பலமுறை கடந்து வந்துள்ளது. நிலத்தடி நீராதாரம் குறைந்த வண்ணம் உள்ளது. உள்ளூர் நீராதாரங்கள் அனைத்தும் கைவிடப்பட்ட நிலையில் ஓரு சில நீராதாரங்கள் மட்டுமே உதவுகின்றன. தினமும் உள்ளாட்சி பகுதிகளுக்கு தாமிரபரணி நீராதாரம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. குடிநீருக்கு சிக்கல்கள் நிலவும் நிலையில் நீண்ட துாரத்தில் இருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. வழி நெடுகிலும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியும், குளம் போல் தேங்கியும் வருவது வேதனையளிக்கிறது.

Read More

கி.மு.600 முதல் இன்று வரையிலான நாணயங்கள் காலத்திலும் அழியாத கலைநயமிக்க பொக்கிஷங்கள் ரகங்கள் வாரியாக பாதுகாக்கும் ராஜராஜன்

விருதுநகர்:பழங்கால கலைப்பொருட்களை சேகரிப்பதும் ஒரு கலை தான். பல நுாற்றாண்டுகளை கடந்து பழமையின் பெருமைகளை பழங்கால பொருட்களே சாட்சியாக நின்று பறைசாற்றுகிறது. அந்தவகையில் நாணயங்கள் , பல்வேறு நாட்டு ரூபாய் நோட்டுக்களை சேகரிப்பதில் சிலருக்கு ஆர்வம் அதிகம். அதையும் கடந்து கலைநயம்மிக்க பழங்கால பொருட்களை தேடி சென்று சேகரிப்பது, பாதுகாப்பது என்பது சவால்கள் நிறைந்த காரியம். சிவகாசியை சேர்ந்த ராஜராஜன் பழங்கால பொருட்களை பல ஆண்டுகளாக சேகரித்து வருகிறார். அரசு அருங்காட்சியகங்களில் இவரது பழமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இது இன்றும் மாணவர்கள், பார்வையாளர்களிடையே அதிக வரவேற்பை பெறுகிறது. கி.மு. 600 ல் சந்திரகுப்த மவுரியர் அச்சிட்ட இந்தியாவின் முதல் நாணயத்தில் துவங்கி இன்றைய ஒரு ரூபாய் சில்வர் நாணயம் வரை நாணயங்களை சேகரித்துள்ளார். ராஜராஜன் கூறியதாவது: தாத்தா காலத்தில் இருந்து பழமையான பொருட்களை சேகரித்து வருகிறேன்.முன்னோர்கள் பயன்படுத்திய பித்தளை,…

Read More

செய்திகள் சில வரிகளில்… விருதுநகர்

காரியாபட்டி:காரியாபட்டி வேளாண் உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி: நிலக்கடலை பயிரிட ஏக்கருக்கு 50 கிலோ விதையை பயன்படுத்தி ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைக்கோ டெர்மா கலந்து விதைக்க வேண்டும். வரிசைக்கு 30 செ.மீட்டர், செடிக்கு செடி 10 செ.மீட்டர், நான்கு செ.மீட்டர் ஆழத்தில் விதைக்க வேண்டும். இதன் மூலம் ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் பெற முடியும், என குறிப்பிட்டுள்ளார்.

Read More

Virudhunagar District Police

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் குல்லூர்சந்தையில் இருந்து பாலவநத்தம் செல்லும் சாலையில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, பாலவநத்தம் அருகில் வாகன விபத்தில் சிக்கிய நான்கு நபர்கள் சாலையில் காயமுற்று ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு, தலையில் காயமுற்றிருந்த சிறுமி உள்பட நான்கு நபர்களுக்கு துரிதமாக முதலுதவி சிகிச்சை அளித்து தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்று உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்கள். #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More