ஜனநாயகத்திற்காக போராடியவர்களை தேசம் மறக்காது: பிரதமர்

புதுடில்லி: அவசர நிலை காலத்தின் போது, ஜனநாயகத்தை பாதுகாக்க தியாகம் செய்தவர்களை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதன் 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு டுவிட்டரில் பிரதமர் வெளியிட்ட பதிவு 45 ஆண்டுகளுக்கு முன்பு , இதே நாளில் இந்தியாவில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போது, இந்தியாவில் ஜனநாயகத்திற்காக போராடியவர்கள் கொடுமைகளை அனுபவித்தனர். அவர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்தை தேசம் எப்போதும் மறக்காது என தெரிவித்துள்ளார்.

அதில் பிரதமர் கூறியதாவது: அவசர நிலை அமல்படுத்தப்பட்ட போது, எதிர்க்கட்சிகள், அரசியல் நடவடிக்கைகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அனைவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இழந்த ஜனநாயகம் வேண்டும் என மக்கள் கோபப்பட்டனர். ஒருவரிடம் இருந்து ஜனநாயக உரிமைகளை பறிக்கும் போது தான், அதன் மதிப்பை அவர் உணர்வார். அவசர நிலை காலத்தில், ஒவ்வொரு குடிமகனும், தங்களிடம் இருந்து சிலவற்றை பறித்து கொள்ளப்பட்டதாக உணர்ந்தனர் என தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment