நம்மை ஊக்கப்படுத்துவது பாராட்டுகள் தான்!

நம்மை ஊக்கப்படுத்துவது பாராட்டுகள் தான்!வயது, 14 தான். ஒரு கம்பெனிக்கு, சி.இ.ஓ., ஆனது எப்படி என, ‘டிரம்மர்’ சரண்: சென்னை அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்தவன் நான். ‘டிரம்ஸ் சர்க்கிள்’ என்ற நிறுவனத்தைத் துவங்கி இருக்கிறேன். இந்த வருஷம் ஒன்பதாம் வகுப்பு போறேன். பிசினஸ்மேன் ஆகணுங்கிறது தான் என்னோட ஆசை.
இப்போ அது நிறைவேறிக்கிட்டு இருக்கு. என்னோட, ‘டிரம்ஸ் சர்க்கிள்’ கம்பெனிக்கு, நான் தான் சி.இ.ஓ.,
அப்பா, ‘சர்ப்ரைஸ் பிளானிங்’ பிசினஸ் பண்ணிட்டு இருக்காங்க. அம்மா ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்கிறாங்க. தங்கச்சி லயாவுக்கு, 4 வயசு ஆகுது. ரொம்ப நல்லா பாட்டு பாடுவா.
தட்டு, தம்ளரை வெச்சுத்தான், ஆரம்பத்தில தாளம் போட பழகினேன். என் ஆர்வத்தைப் பார்த்துட்டு டிரம்ஸ் வகுப்புல சேர்த்து விட்டாங்க. டிரம்ஸ் கத்துக்கிட்டது மட்டுமல்லாமல் பாங்கோ, ஜிம்பே, ககூன், பறை, டிரம்ஸ், துடும்புனு நிறைய கருவிகள் வாசிக்கக் கத்துக்கிட்டேன். ஆனா, நான் டிரம்ஸ் சம்பந்தமா எந்தப் போட்டிக்கும் போனதில்ல; எந்தப் பரிசும் வாங்கினது இல்ல. எங்க வீட்டுலயும் என்னைக் கட்டாயப்படுத்தினது இல்ல.
திறமைக்கு அங்கீகாரம், பாராட்டுகள் தான், பரிசுகள் இல்லை. நம்ம திறமையை வெளிப்படுத்த ஆயிரம் வழிகள் இருக்கு.’காலத்துக்குத் தகுந்த மாதிரி நாமும், ‘அப்டேட்’ ஆகிட்டே இருந்தா தான், இந்த உலகத்தில், ‘சர்வைவ்’ பண்ண முடியும்’னு அப்பா சொல்லுவாங்க. அந்த வார்த்தை தான், எல்லாத்துக்கும் காரணம்.’சின்ன பையன் நீ; சின்ன பையன் மாதிரி இரு’ன்னு சொல்லி, பசங்களை வீட்டில் யோசிக்கவே விடமாட்டாங்க. ஆனா, எங்க வீட்டில் எனக்கு, எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. நம்ம மனசில் நினைக்கிறதை வெளிப்படையா பேசுனா தான், தப்பானதை திருத்திக்க முடியும்.
அப்போ தான், நம் தன்னம்பிக்கை அதிகமாகும். அதுக்கு எனக்கு, எங்க வீட்டில் முழு சுதந்திரம் கொடுத்திருக்காங்க. எந்த ஒரு வேலையைச் செய்யவும், ‘கைடன்ஸ்’ கொடுப்பாங்க.
ஒரு வேலையை நாம தனியா எடுத்துச் செய்யும் போது தான் தப்புகள் வரும். அப்போது தான் அது மறக்க முடியாத பாடமாக மாறும்.’நீ டாக்டர் ஆகணும், பெரிய வக்கீல் ஆகணும்’னு எனக்கு, எந்த நிர்ப்பந்தத்தையும் எங்க வீட்டுல கொடுக்கல. ‘படிப்பு, வாழ்க்கை தான். ஆனா படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை’ன்னு அப்பா அடிக்கடி சொல்லுவாங்க. அதனால், மார்க் பத்தி எந்த பயமும் இல்லாமல், ஸ்கூல் பாடத்தோட சேர்த்து, மியூஸிக்லயும் என்னால் கவனம் செலுத்த முடிகிறது. இந்த வயதில், நான் சம்பாதித்த பணத்தில் கொஞ்சத்தை ஏழைகளுக்கு கொடுத்து உதவியுள்ளேன்!

Related posts

Leave a Comment