வீடு வீடாக ஜிங்க், கபசுர குடிநீர்

விருதுநகர்:விருதுநகரில் வீடு வீடாக சென்று ஜிங்க், கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் வழங்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து பரவலும் உச்சம் பெற்று வருகிறது. தனிமைப்படுத்தப்பட்டோர், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே ஜிங்க் மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. பிற பகுதிகளில் வழங்கவில்லை. டெங்கு காய்ச்சலின் போது அரசு மருத்துவமனைகள், நகராட்சிகள், கலெக்டர் அலுவலகம் என அனைத்து பகுதிகளிலும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.

இது நல்ல பலனை தந்தது. நோயின் தாக்கம் மளமளவென குறைந்தது. எனவே கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் வீடு வீடாக சென்று ஜிங்க், கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை வழங்க நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

Leave a Comment