எனக்கு விதவிதமா சமைக்க பிடிக்கும்… பாட்டு, டான்ஸ் எல்லாமே செய்வேன்…மேரிகோம்

கொல்கத்தா : 6 முறை உலக குத்துச்சண்டை பட்டம் வென்றுள்ள மேரிகோம், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியுள்ள நிலையில், தன்னுடைய அன்றாட வீட்டுவேலைகளை செய்துவருவதாக தெரிவித்துள்ளார். தனக்கு விதவிதமாக சமைப்பது பிடிக்கும் என்றும், சாதாரண நாட்களை விட தற்போது, தன்னுடைய குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிப்பிக்களை சமைத்து தருவதாகவும் அவர் கூறியுள்ளார். பாட்டு, டான்ஸ் என குழந்தைகளுடன் சேர்ந்து அதிக நேரத்தை செலவிடுவதுடன், தன்னுடைய பிட்னஸ் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதகாவும் அவர் கூறியுள்ளார்.

குத்துச்சண்டை வீராங்கனை குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தற்போது வீட்டில் குடும்பத்தினருடன் பொழுதை போக்கி வருகிறார். மேலும் தனது பிட்னஸ் பயிற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

விதவிதமான சமையல் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டில் முடங்கியுள்ள இந்த நேரத்தில் தன்னுடைய வீட்டில் அன்றாட வேலைகளை செய்து வருவதாக மேரிகோம் தெரிவித்துள்ளார். தனக்கு விதவிதமாக சமைப்பது மிகவும் பிடிக்கும் என்றும் இந்த நேரத்தில் தன்னுடைய குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிப்பிகள், ஸ்நாக்ஸ் வகைகளை செய்து அசத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிட்னஸ் பயிற்சிகள் தனக்கு டான்ஸ், பாட்டு பாடுவது உள்ளிட்டவை மிகவும் பிடிக்கும் என்றும், தனது குழந்தைகளுடன் சேர்ந்து இவற்றை செய்து வருவதாகவும் மேரிகோம் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பிட்னஸ் பயிற்சிகளையும் விடாமல் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆயினும் இந்த ஊரடங்கு பல்வேறு சவால்களை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விளையாட்டு சிறந்த கேரியர் குத்துச்சண்டை மற்றும் விளையாட்டு இரண்டுமே சிறந்த கேரியர் வாய்ப்புகள் என்ற தெரிவித்துள்ள மேரிகோம், இதன்மூலம், நல்ல வசதி, அதிர்ஷ்டம், புகழ் போன்றவை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டிற்காக விளையாடுகிறோம் என்ற பெருமையும் நமக்கு கிடைக்கும் என்று கூறியுள்ள மேரிகோம், இதற்கான வாய்ப்புகள் கிடைத்தால் இரண்டு கைகளால் அதை வரவேற்கவும் கூறியுள்ளார். ஆனால் கடின உழைப்பு இல்லையென்றால், இதில் எதையும் பெறமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment