பட்டாசு ஆலைகளில் வேலை நாள் குறைப்பு

சிவகாசி:சிவகாசி மீனம்பட்டி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி கூறியதாவது:

ஊரடங்கால் பட்டாசு வியாபாரிகள் வர இயலவில்லை. ஆலைகளில் உற்பத்தியான பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளன. சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் அடக்க விலையை விட குறைவான விலைக்கு ஏஜென்டுகள் கேட்பதாலும், பட்டாசு தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் விலையேற்றத்தாலும் தொடர்ந்து பட்டாசு உற்பத்தி செய்ய முடியவில்லை.

மூலப் பொருட்கள் வாங்க பணம் இல்லாமலும், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு இயல்பு நிலைக்கு வரும் வரை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கருதி திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மட்டும் ஆலைகள் இயங்கும், என்றார்.

Related posts

Leave a Comment