ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்

வாழ்க்கை ஒரு முறைதான்.. நீங்கள் அதை சரியாக வாழ்ந்து விட்டால்.. அந்த ஒரு வாழ்க்கையே போதுமானது. நிறையப் பேருக்கு அடுத்த பிறவியில் இப்படி இருக்க வேண்டும்.. அப்படி இருக்க வேண்டும் என்ற ஆசை எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் நாம் வாழும் இந்த வாழ்க்கையை சரியாக வாழ்ந்தாலே போதும்.. அதுதான் நிதர்சனமும் கூட. இரவு படுக்கும் நாம் காலையில் கண்விழிப்போமா என்றே தெரியாது. இதில் அடுத்த ஜென்மத்தில் நான் இப்படி இருக்க வேண்டும் என்று நாம் எப்படி தீர்மானிக்க முடியும். பிறப்பதும் இறப்பதும் நம் கையில் இல்லை ஆதலால் கிடைத்த இப்பிறவியில் செவ்வனே வாழ்ந்து விடவேண்டும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பார்கள். உலகமே போற்றும் வண்ணம் வாழ வேண்டும். இப்பிறவியிலேயே நீங்கள் என்னவெல்லாம் சாதிக்க நினைக்கிறீர்களோ அத்தனையும் சாதித்துவிட வேண்டும். ஒரு முறை கிடைத்த இந்த அரிய வாழ்க்கையை அற்புதமாக…

Read More

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் 2021க்கு தள்ளிவைப்பு.. காரணம் இதுதான்!

டெல்லி : இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க இருந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் 2021க்கு தள்ளி வைக்கப்பட்டது. இதுகுறித்து தொடரை நடத்த உள்ள காஸ்மோஸ் டென்னிஸ் மற்றும் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2020 டேவிஸ் கோப்பை தொடர் மாட்ரிட் நகரில் நடக்க இருந்தது. 2020, நவம்பர் 23 முதல் 29 வரை அந்த தொடர் நடக்க இருந்தது. அந்த தொடரில் 18 நாடுகளை சேர்ந்த டென்னிஸ் அணிகள் பங்கேற்க இருந்தன. அந்த தொடர் திட்டமிட்டபடி நடந்தால் 90க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், அவர்களின் உதவியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் அந்த தொடரில் பங்கேற்பார்கள். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவலால் பல நாடுகளும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் உச்சம் பெற்றுள்ள கொரோனா வைரஸ், சில நாடுகளில்…

Read More

சும்மா இருக்கோம்னு நினைக்காதீங்க.. 2023 உலக கோப்பைக்காக திட்டமிட்டுக்கிட்டு இருக்கோம்

மெல்போர்ன் : கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா காரணமாக வீட்டில் முடங்கியிருந்தாலும் ஆஸ்திரேலியாவின் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், தன்னை பிசியாகவே வைத்துக் கொண்டுள்ளார். வரும் 2023ல் இந்தியாவில் ஒருநாள் போட்டிகளின் உலக கோப்பை நடைபெறவுள்ள நிலையில், அதில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை தான் தற்போது முதலே ஆராய்ந்து வருவதாக பிஞ்ச் தெரிவித்துள்ளார். அந்த தொடரில் கோப்பையை கைபற்ற ஆஸ்திரேலியாவிற்கு 2 ஸ்பின்னர்கள், கூடுதலாக ஆல்-ரவுண்டர் போன்றவை தேவை என்பதை கணித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடரை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் சூழலில் இந்த தொடரை நடத்துவது சாத்தியமில்லை என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில்…

Read More

எவ்வளவு பெரிய ஆள்.. அவர் உதவி செய்வார்.. அந்த ஜாம்பவானை நம்பி ஏமாந்த சச்சின்!

மும்பை : சச்சின் டெண்டுல்கர் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்தார். ஆனால், கேப்டனாக அவரது செயல்பாடுகள் அத்தனை சிறப்பாக அமையவில்லை. தான் கேப்டனாக இருந்த போது ஒரு முக்கிய தொடரில் அப்போதைய பயிற்சியாளராக இருந்த ஜாம்பவான் வீரர் ஒருவரை நம்பி ஏமாற்றம் அடைந்ததை தன் சுயசரிதையில் குறிப்பிட்டு இருந்தார். அந்த ஜாம்பவான் வீரர் கபில் தேவ். ஆம், இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்த கபில் தேவ், பயிற்சியாளராக சரியாக செயல்படவில்லை என குற்றம் சாட்டி இருந்தார் சச்சின். கேப்டன் சச்சின் சச்சின் டெண்டுல்கர் இரண்டு முறை இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இரண்டு முறையும் அவர் ஏமாற்றத்தை மட்டுமே அளித்தார். சிறந்த பேட்ஸ்மேன் என அப்போதே உலகின் மொத்த கவனத்தையும் ஈர்த்த சச்சினால், அணியை திறம்பட வழிநடத்த முடியவில்லை. 8 ஆண்டு காலம் கழித்து.. 1989ஆம்…

Read More

மேற்கு வங்கத்தையடுத்து அடுத்த மாநிலம்.. ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்த ஜார்கண்ட்

ராஞ்சி: மேற்குவங்க மாநிலத்தை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கபடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து வருவதால், ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மேற்கு வங்க மாநில அரசு கடந்த 24 ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் அரசு இன்று அதே போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் வியாழக்கிழமை வரையிலான நிலவரப்படி 2,261 கொரோனா கேஸ்கள் பதிவாகியிருந்தன. இதுவரை அங்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நேரத்தில்தான் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஊரடங்கு உத்தரவை ஜூலை 31ம் தேதி வரை நீட்டிப்பதாக இன்று தெரிவித்துள்ளார். 5வது ஊரடங்கு காலம் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் பிறகு ஜூலை 1ம் தேதி முதல் எந்த மாதிரியான…

Read More

Sivakasi News

சிவகாசி நகராட்சி தெரு மற்றும் சாலையோர பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் தெரு பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்… மேலும் சில மாடுகள் பாதசாரிகளை முட்டுகிறது… உடனடியாக சிவகாசி நகராட்சி அலுவலர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி பொது மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்…

Read More

Sivakasi Union Office News

சிவகாசி ஊராட்சி ஒன்றிய குழு அலுவலக கூட்டம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் திரு.V.விவேகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கபசுரக் குடிநீர் விநியோகிக்கப்பட்டது

Read More