விருதுநகரில் 13 இடங்களுக்கு ‘சீல்’

விருதுநகர்:விருதுநகர் நகராட்சி பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட 13 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் பர்மா காலனி, மொன்னித்தெரு, பெரிய பள்ளிவாசல், இந்திரா நகர், பவுண்டுத் தெரு, அகமது நகர், சவுண்டித்தெரு, காந்திபுரம் தெரு, ராமமூர்த்தி ரோடு, ரயில்வே பீடர் ரோடு, கல்லுாரி ரோடு, அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி ஆகிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டு நோய்க்கட்டுபாட்டு பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிக்கு பிற பகுதி மக்கள் நுழைய வேண்டாம் என நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி: நோய்க்கட்டுபாட்டு பகுதிகளில் காய்ச்சல் இருக்கிறதா என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் வசிப்போருக்கு கப சுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பல்ஸ் ஆக்ஸி மீட்டர் சோதனையும் செய்யப்பட்டு வருகிறது, என்றார்.

Related posts

Leave a Comment