டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் 2021க்கு தள்ளிவைப்பு.. காரணம் இதுதான்!

டெல்லி : இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க இருந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் 2021க்கு தள்ளி வைக்கப்பட்டது. இதுகுறித்து தொடரை நடத்த உள்ள காஸ்மோஸ் டென்னிஸ் மற்றும் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2020 டேவிஸ் கோப்பை தொடர் மாட்ரிட் நகரில் நடக்க இருந்தது. 2020, நவம்பர் 23 முதல் 29 வரை அந்த தொடர் நடக்க இருந்தது.

அந்த தொடரில் 18 நாடுகளை சேர்ந்த டென்னிஸ் அணிகள் பங்கேற்க இருந்தன. அந்த தொடர் திட்டமிட்டபடி நடந்தால் 90க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், அவர்களின் உதவியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் அந்த தொடரில் பங்கேற்பார்கள். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவலால் பல நாடுகளும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் உச்சம் பெற்றுள்ள கொரோனா வைரஸ், சில நாடுகளில் இப்போது தான் தாக்கத்தை துவக்கி உள்ளது.

Related posts

Leave a Comment