ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்

வாழ்க்கை ஒரு முறைதான்.. நீங்கள் அதை சரியாக வாழ்ந்து விட்டால்.. அந்த ஒரு வாழ்க்கையே போதுமானது. நிறையப் பேருக்கு அடுத்த பிறவியில் இப்படி இருக்க வேண்டும்.. அப்படி இருக்க வேண்டும் என்ற ஆசை எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் நாம் வாழும் இந்த வாழ்க்கையை சரியாக வாழ்ந்தாலே போதும்.. அதுதான் நிதர்சனமும் கூட. இரவு படுக்கும் நாம் காலையில் கண்விழிப்போமா என்றே தெரியாது. இதில் அடுத்த ஜென்மத்தில் நான் இப்படி இருக்க வேண்டும் என்று நாம் எப்படி தீர்மானிக்க முடியும். பிறப்பதும் இறப்பதும் நம் கையில் இல்லை ஆதலால் கிடைத்த இப்பிறவியில் செவ்வனே வாழ்ந்து விடவேண்டும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பார்கள். உலகமே போற்றும் வண்ணம் வாழ வேண்டும்.

இப்பிறவியிலேயே நீங்கள் என்னவெல்லாம் சாதிக்க நினைக்கிறீர்களோ அத்தனையும் சாதித்துவிட வேண்டும். ஒரு முறை கிடைத்த இந்த அரிய வாழ்க்கையை அற்புதமாக வாழ்ந்திட வேண்டும். இறைவனை வணங்கி மனைவி மக்களோடு மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழுங்கள். புதுப் புது விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் நேரம் செலவிடுங்கள். உங்களுடைய வாழ்க்கையைச் சிறப்பாக இந்த ஜென்மத்திலேயே வாழ்ந்து விடுங்கள். முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யுங்கள். பெற்றோரைப் பேணிக் காத்திடுங்கள். உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள். உங்களின் செய்கையால் உங்கள் துணையை மகிழ்வியுங்கள்.

வாழ்க்கையை சிறப்பாக வாழுங்கள் மகிழ்ச்சியோடும் குறிக்கோளோடும் வாழுங்கள். வாழ்க்கை என்பது ஒரு முறை தான் அதில் நாமும் சிறப்பாக வாழலாம் பலமுறை தான்

Related posts

Leave a Comment