ராஜபாளையத்தில் ஜமாபந்தி

ராஜபாளையம்:ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கலெக்டர் கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் அப்பனேரி, கடம்பன்குளம், கொத்தங்குளம், சமுசிகாபுரம், அரிசியார் பட்டி, மேலராஜகுலராமன், ரகுநாதபுரம் கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஊரடங்கை முன்னிட்டு கூட்டத்தை தவிர்க்க பொது மக்களிடம் மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி தடை செய்யப்பட்டு கணக்கு தணிக்கை பணிகள் நடந்தன. சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், ராஜபாளையம் தாசில்தார் ஆனந்தராஜ் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment