விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றிய எஸ்.பி., : மாண்டு போகாது மனித நேயம்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி முத்தரையர் நகரை சேர்ந்த வீரவேல் 33, மனைவி அன்னலட்சுமி 31, மகன் விஜயபாபு 8, மகள் விஜி 6, ஆகியோருடன் குல்லுார் சந்தையில் இருந்து டூ வீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்ற போது நிலைதடுமாறி விழுந்து காயமடைந்தனர்.

அவ்வழியாக அருப்புக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த விருதுநகர் போலீஸ் எஸ்,.பி., பெருமாள் தனது காரில் நால்வரையும் ஏற்றி சென்று அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

இன்ஸ்பெக்டருக்கு ‘டோஸ்’

அருப்புக்கோட்டையில் விருதுநகர் ரோடு சந்திப்பில் காயமடைந்தவர்களை எஸ்.பி., ஏற்றி வந்து கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு போலீசார் இல்லை. ஒருவழியாக நால்வரையும் மருத்துவமனையில் சேர்த்தார். பின் டவுன் ஸ்டேஷனில் ஆய்வு செய்தார். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் மெத்தனம் காட்டிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமாருக்கு ‘டோஸ்’ விட்டார்.

மக்கள் முன்வர வேண்டும்

எஸ்.பி., பெருமாள் கூறுகையில், ”சாலைகளில் செல்லும் போது வாகன விபத்தில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டிருந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முன் வர வேண்டும். சில நேரங்களில் அதிக ரத்த இழப்பினால் கூட உயிரிழப்பு ஏற்பட்டு விடும். இதை தவிர்க்க மக்கள் மனம் இறங்கி உதவ வேண்டும், என்றார்.

Related posts

Leave a Comment