இணைய தள கருத்தரங்கு

ஸ்ரீவில்லிபுத்துார்:கிருஷ்ணன்கோயில் கலசலிங்கம் பல்கலை சார்பில் பொறியியல் மற்றும் அறிவியல் நிர்வாகத்துறையில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து இணைய தள கருத்தரங்கு பல்கலை துணை தலைவர் சசிஆனந்த் தலைமையில் நடந்தது. துணை வேந்தர் நாகராஜ் வரவேற்றார். அமெரிக்க பேராசிரியர் ஜெய்பாகா துவக்கி வைத்து பேசினார். டீன் வினோலீன் கலந்து கொண்டார். பல்வேறு நாடுகளை சேர்ந்த பேராசிரியர்கள் 550 கட்டுரைகளை சமர்பித்தனர். பதிவாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment