மாணவியை பாராட்டிய சப்-கலெக்டர்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான சர்க்கரைகுளத்தை சீரமைத்து மழைநீர் சேகரிப்பை உருவாக்கி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி மாணவி ஸ்ரீலெட்சுமி கடிதம் எழுதினார். சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் நேரில் சென்று மாணவியிடம் பாராட்டு கடிதம் வழங்கினார். குளத்தை பார்வையிட்டு துார் வார நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தாசில்தார் கிருஷ்ண வேணி, நகராட்சி கமிஷனர் சத்தியநாதன், வருவாய் ஆய்வாளர் பால்துரை உடனிருந்தனர்.

Related posts

Leave a Comment