அமைதியை நிலையாக்கும் குடில்: தர்ப்பை புல்லால் நிகழும் அதிசயம்

விருதுநகர்:சித்த தலம் போல் தெய்வம் இருக்கும் சுத்த தலங்கள் உண்டோ’ என குதம்பை சித்தர் பாடினார். சித்தர்கள் பூஜித்த லிங்கங்கள், ஜீவசமாதி அடைந்த இடங்கள் உயர்ந்த வழிபாட்டு தலங்களாக கருதப்படுகின்றன. உள் கடந்து கடவுளை தியானம் வழியாக கண்டவர்களே சித்தர்கள் எனப்படுகின்றனர்.

18 சித்தர்கள் அறியப்பட்டாலும் அவர்களை பின்பற்றி சிவ வழிபாட்டில் ஈடுபட்டு முக்தி பெற்ற அனைவருமே சித்தர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். விருதுநகர் எஸ்.எப்.எஸ்.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பின்புறம் சித்தர்கள் குடில் ஒன்று உள்ளது. இங்கு மூல லிங்கமாக சிவன், இடப்பக்கம் சித்தர்களின் அன்னை வாழைக்குமரி, வலதுபுறம் அகத்தியர் வீற்றிருக்கின்றனர். 27க்கு 27 நீள, அகலத்தில் மூங்கிலால் இக்குடில் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குடில் தர்ப்பை புல்லால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் அமர்ந்து தியானம் செய்யும் போது உடலில் ரத்த ஓட்டம் சீராகி மனம் அமைதி பெறுகிறது. சித்தர்களின் ஜீவசமாதிகளில் இருந்து பிடிமண் எடுத்து இந்த குடில் கட்டப்பட்டுள்ளது.வளாகத்தில் ஆதிபுவனையம்மன், செல்வ விநாயகர், புற்றுக்கோயில், முருகர், 27 ராசிகளுக்கான லிங்கங்கள் உள்ளன. வளாகம் முழுக்க மூலிகை மரங்களால் நிறைந்து பசுமையாக காட்சி அளிக்கின்றன.

இக்கோயிலில் நேர்த்திக்கடனோ, பூஜைகளோ கிடையாது. யார் வேண்டுமானாலும் வந்து தியானம் செய்து மனதை அமைதிப்படுத்தி கொள்ளலாம். தர்ப்பை புல்லால் நிகழும் அதிசயத்தை காண நேரில் வந்து தான் உணர முடியும். நகரிலிருந்து சற்று துாரத்தில் அமைந்திருக்கும் தர்ப்பை குடிலை பார்க்கும் போதே மனதில் அமைதியை நிலையாக்குகிறது.

கடவுளும் தியானமும்

அகத்தியரை மூலவராக கொண்டு யோகா, தியானமும் மேற்கொள்ளவே 2014ல் கோயில்

கட்டினோம். ஆற்றோரம் அதிகம் கிடைக்கும் தர்ப்பை புல் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியது. வியாழன் தோறும் அன்னதானம் உண்டு. ஊரடங்கால் அன்னதானம்

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சித்தர்கள் குடில்கள் வர விரும்புவோர் ஊரடங்கு முடிந்து, அரசு அறிவிப்புக்கு பின் வரலாம். இங்கு முக்கிய வழிபாடு கடவுளை உணர செய்யும் தியானம் மட்டுமே.

ராஜேஷ், சேவகர், சித்தர்கள் குடில்

Related posts

Leave a Comment