மேற்கு வங்கத்தையடுத்து அடுத்த மாநிலம்.. ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்த ஜார்கண்ட்

ராஞ்சி: மேற்குவங்க மாநிலத்தை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கபடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து வருவதால், ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மேற்கு வங்க மாநில அரசு கடந்த 24 ஆம் தேதி அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் அரசு இன்று அதே போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் வியாழக்கிழமை வரையிலான நிலவரப்படி 2,261 கொரோனா கேஸ்கள் பதிவாகியிருந்தன. இதுவரை அங்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நேரத்தில்தான் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஊரடங்கு உத்தரவை ஜூலை 31ம் தேதி வரை நீட்டிப்பதாக இன்று தெரிவித்துள்ளார். 5வது ஊரடங்கு காலம் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் பிறகு ஜூலை 1ம் தேதி முதல் எந்த மாதிரியான ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் என்பதை மத்திய அரசு அறிவிக்க உள்ளது.

Related posts

Leave a Comment