சிவகாசி நகராட்சி பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி

சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.1 கோடியே 16 லட்சம் செலவில் புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.சிவகாசி: சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட நேரு காலனியில் ரூ.50 லட்சம் செலவில் புதிய சமுதாய கூடம், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளது. இதன் பூமி பூஜை நேற்று காலை நேரு காலனியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதேபோல் எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியின் அருகில் ரூ.15 லட்சம் செலவில் ஒரு பஸ் நிறுத்தம், காரணேசன் பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் ஒரு பஸ் நிறுத்தம், சிவகாசி அண்ணாமலை நாடார்-உண்ணாமலை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.36…

Read More

இந்த மந்திரத்தை சொன்னால் கொரோனா தானாக ஓடிவிடும் -ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

கோவில்களை திறக்க வேண்டுமென்றும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அரசை வலியுறுத்தி உள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மணவாள மாமுனிகள் மடத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘கொரோனா காலத்தில் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று அரசை வலியுறுத்தினார். ‘தமிழகத்தில் தற்போது உள்ள நிலைமை ஏற்புடையதல்ல. தமிழகத்தில் அனைத்து கோவில்களும் திறக்கப்பட வேண்டும். கோவில்களை திறக்க நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும். ஆண்டாள் கோவிலில் வழிபட இ-பாஸ் கொடுக்க வேண்டும். மேலும் 108 முறை ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து ஜெபம் செய்தால் மருந்து மாத்திரைகள்…

Read More

விருதுநகரில் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 372ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர்: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே 314 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 372ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 158 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read More

ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு நிகழ்ந்த கொடுமையை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் – ஷிகர் தவான் டுவிட்

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு நிகழ்ந்த கொடுமையை கேட்டுகும் போது மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளேன் என இந்திய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். புதுடெல்லி:சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருவரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பல்வேறு…

Read More

இந்திய கிரிக்கெட் அணி 2013-க்குப் பிறகு ஐசிசி தொடரை வெல்லாதது துரதிருஷ்டம்: புவனேஷ்வர் குமார்

இந்திய கிரிக்கெட் அணி 2013-க்குப் பிறகு ஐசிசி தொடரை வெல்லாதது துரதிருஷ்டமானது என்று வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி எம்.எஸ். டோனியின் தலைமையில் மூன்று ஐசிசி தொடர்களை வென்றுள்ளது. ஆனால் விராட் கோலி தலைமையில் இன்னும் ஒன்றைக்கூட வெல்லவில்லை.2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது.இந்நிலையில் 2013-க்குப்பிறகு இந்தியா ஐசிசி தொடரை வெல்லாதது துரதிருஷ்டமானது என்று வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புவனேஷ்வர் குமார் கூறுகையில் ‘‘நாம் கடைசியாக 2013-ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். அதன்பின் 3 அல்லது நான்கு தொடர்களில் விளையாடியுள்ளோம். நாம் அரையிறுதிக்கு அல்லது இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளோம்.2015 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் தோற்றோம். அதேபோல்…

Read More

தமிழகத்தில் ஜூலை 15-ந்தேதி வரை சிறப்பு ரெயில்கள் ரத்து – தெற்கு ரெயில்வே

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஜூலை 15-ந்தேதி வரை சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. சென்னை: இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று புதிதாக 3,713 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானோர் எண்ணிக்கையும் 1,025 ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஜூலை 15-ந்தேதி வரை சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. மேலும் தனது செய்திக்குறிப்பில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே…

Read More

பண்ணைக்குட்டை ‘ஓகே’ மானியம் வராததால் அவதி

ராஜபாளையம்:பண்ணைக்குட்டை அமைக்கும் பணிக்கு உரிய நேரத்தில் மானியம் வழங்காததால் விவசாயிகள் தவிக்கின்றனர். ராஜபாளையம் கலங்காபேரி புதுாரை சேர்ந்தவர் பாலமுருகன். 4.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கண்மாய் பாசன வசதி இல்லாத விவசாயிகள் பண்ணைக்குட்டை அமைத்து மழை நீரை சேமிக்க மத்திய அரசின் நீர்வள மேம்பாட்டு துறை தலா ரூ.ஒரு லட்சம் மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பாலமுருகன் ரூ.70 ஆயிரம் செலவழித்து 60 சதவீத பணிகளை முடித்தார். ரூ.30 ஆயிரம் மட்டுமே மானியம் கிடைத்தது. பாலமுருகன் விரக்தி யில் உள்ளார். இவருக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கும் வந்து விடக்கூடாது என எண்ணிய விவசாயிகள் பலர் பண்ணைக்குட்டைக்காக தோண்டிய பள்ளத்தையே மூடி விட்டனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read More

கொள்ளை கொள்ளும் குரோட்டன்ஸ்

காரியாபட்டி காரியாபட்டி பகுதியை பசுமையாக்கும் நோக்கில் ஸ்ரீ பிரேமிக வரதன் நர்சரி செயல்படுகிறது. ஆந்திரா, பெங்களூர், கேரளா உள்ளிட்ட இடங்களிலிருந்து செடிகள், மரக்கன்றுகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பஞ்ச கவ்யம், மீனமிலம் என இயற்கை உரங்கள் மூலம் எந்த சூழ்நிலையிலும் வளரும் செடிகள் உருவாக்கப்படுகிறது. லில்லி, டயமண்ட் பாக்யா, பாம்ஸ், பெட்ரா, கொய்யா, ரோஸ், பாரிஜாதம், பவளமல்லியுடன் நந்தியாவட்டை, சிறியாநங்கை, துளசி, வசம்பு, லெமன்கிராஸ், வெட்பாலை உள்ளிட்ட மூலிகை கன்றுகள், மா, சப்போட்டா, பலா உள்ளிட்ட பழ வகை கன்றுகள், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நாட்டு செர்ரி, இன்சுலின், சிவப்பு, மஞ்சள் கொன்றை, மந்தாரை, மகிழம், கடம்பு, இலுப்பை, உத்திராட்சம், திருவோடு உள்ளிட்ட ஏராளமான செடிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் உரிமையாளர் சுப்புலட்சுமி: குறைந்த தண்ணீர் செலவில் அடர்நடவு முறையை பின்பற்றி கொய்யா, அர்க்காகிரெயின், தாய்வான்பிங்க், எல் 49,…

Read More

வெளிநாடு செல்லும் அருப்புக்கோட்டை மல்லிகை: பருமனாக, மணமாக உள்ளதால் தனி கிராக்கி

அருப்புக்கோட்டை :அருப்புக்கோட்டையில் மல்லிகை அரும்பு விளைச்சல் அதிகமாக இருந்ததால் அக்காலத்தில் அரும்புகோட்டையாக இருந்து பேச்சுவாக்கில் அருப்புக்கோட்டையாக மாறியது. அந்தவகையில் மல்லியால் இன்றும் அருப்புக்கோட்டை மணக்கிறது. இப் பகுதியில் இன்றும் அதிக அளவில் மல்லிகை தோட்டங்கள் உள்ளன. இதன் சுற்றுப்பகுதியான மேட்டு தொட்டியன்குளம், செம்பட்டி, பாலையம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் இப்பூக்கள் பயிரிடப்படுகிறது. மல்லிகை விளைவதற்கு இங்குள்ள செம்மண்ணும் ஏற்ற வகையில் உள்ளது. ராமேஸ்வரம் தங்கச்சி மடம், மண்டபம் பகுதிகளில் மல்லிகை பதியன்களை வாங்கி இங்கு பயிரிடுகின்றனர். இங்கு விளையும் மல்லிகை பருமனாகவும் மணத்துடன் இருப்பதால் அருப்புக்கோட்டை மல்லிகைக்கு என்றுமே தனி கிராக்கி உண்டு.’சென்ட்’ தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் இருப்பதால் ஏஜென்ட்கள் மல்லிகை பூக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அருப்புக்கோட்டை பகுதிகளில் விளையும் மல்லிகையை தான் ‘மதுரை மல்லி’ என மதுரையில் விற்கின்றனர் என்பது…

Read More

கட்டுப்பாட்டை மீறல; கட்டுக்குள் கொரோனா சபாஷ் பெறும் வரலொட்டி

விருதுநகர்:ஊரடங்கில் விவசாய பணிகள் உட்பட அனைத்தும் முடங்கி வருகிறது. கிராமங்களில் விவசாயிகள் காலை 11:00 மணிக்குள் பணிகளை முடித்து வீடு திரும்பி விடுகின்றனர்.வீட்டில் படுத்து முடங்குவதை விட பகல் பொழுதை பயனுள்ளதாக கழிக்க வேண்டும். அதிலும் ஊரடங்கு விதிகளை பின்பற்றியே இவற்றை மேற்கொள்ள வேண்டும் என்ற சுய சார்பு கட்டுப்பாடுகளுடன் ஊரின் மைய பகுதிக்கு வரும் விவசாயிகள், தொழிலாளர்கள் தங்களுக்குள் சமூக இடைவெளியை பின்பற்றி அடர்ந்த வேப்பமரங்களின்நிழலில் தஞ்சமடைகின்றனர். கிராமங்களில் தொன்று தொட்டு மக்கள் கூட்டாக பங்கேற்கும் ‘தாயம்’ விளையாட்டை தேர்வு செய்து மாலை வரை விளையாடி ஆனந்தமாக பொழுதை கழிக்கின்றனர் விருதுநகர் அருகே உள்ள வரலொட்டி கிராம மக்கள். ஊராட்சி அலுவலகம் எதிரே காளியம்மன் கோயில் மந்தையில் ஒன்று கூடும் இவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொழுதை கழிக்கின்றனர். இருவர், இருவராக ஜோடி சேர்ந்து பத்து…

Read More