இந்த மந்திரத்தை சொன்னால் கொரோனா தானாக ஓடிவிடும் -ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

கோவில்களை திறக்க வேண்டுமென்றும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அரசை வலியுறுத்தி உள்ளார்.

இந்த மந்திரத்தை சொன்னால் கொரோனா தானாக ஓடிவிடும் -ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மணவாள மாமுனிகள் மடத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். 
அப்போது, ‘கொரோனா காலத்தில் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று அரசை வலியுறுத்தினார். ‘தமிழகத்தில் தற்போது உள்ள நிலைமை ஏற்புடையதல்ல. தமிழகத்தில் அனைத்து கோவில்களும் திறக்கப்பட வேண்டும். கோவில்களை திறக்க நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும். ஆண்டாள் கோவிலில் வழிபட இ-பாஸ் கொடுக்க வேண்டும். மேலும் 108 முறை ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து ஜெபம் செய்தால் மருந்து மாத்திரைகள் தேவையில்லை, கொரோனா தானாக ஓடிவிடும்’ என்றும் ஜீயர் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment