‘தக் ஷா’ குழுவுக்கு கர்நாடக துணை முதல்வர் பாராட்டு

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் தக் ஷா குழுவுக்கும், குழுவை வழிநடத்தும் நடிகர் அஜித்துக்கும், கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா ஒழிப்பு பணிக்கு, ட்ரோன் கேமரா மூலம் கிருமி நாசின தெளிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தொடர்ந்து சிவப்பு மண்டல பகுதிகளில் இப்பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனை, டாக்டர் கார்த்திக் நாயாணன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். மேலும், இப்பணியில் அஜித் நிறைய பங்காற்றியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தக் ஷா குழுவுக்கும், அக்குழுவின் ஆலோசகராக உள்ள அஜித்துக்கும், கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயண் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் தக் ஷா குழுவுக்கும், அதன் வழிகாட்டியாக இருக்கும் நடிகர் அஜித்துக்கும் என் பாராட்டுக்கள். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிப்பது இதன் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment